தேவையானவை:
பொருள் - அளவு
பீன்ஸ்கால் கிலோ
பச்சை பட்டாணி100 கிராம்
பெரிய வெங்காயம் 2
தக்காளி 4
தேங்காய் துருவல் கால் கப்
மிளகாய்பொடி 1 டேபிள் ஸ்பூன்
தனியா தூள் 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா அரை டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் அரை டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் தேவைக்கேற்ப
கொத்தமல்லி தழை1 கைப்பிடி அளவு
செய்முறை :
பட்டாணியை 2 மணி நேரம் தண்ணீhpல் ஊற வைக்கவும். வெங்காயம், தக்காளியை எண்ணெய் விட்டு நன்கு வதக்கி ஆற வைத்து அரைத்துக் கொள்ளவும்.
பட்டாணியை உப்பு போட்டு நன்றாக வேக வைத்துக் கொள்ளவும். பீன்சை தனியாக வேக வைக்கவும். தேங்காய் துருவலை நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
பிறகு கடாயில் எண்ணைய் ஊற்றி சீரகம் தாளித்து, இஞ்சி பூண்டு விழுது 2 நிமிடம் வதங்கியபின் அரைத்த தக்காளி, வெங்காய விழுதை போட்டு வதக்கவும்.
பின்பு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம் மசாலாதூள், சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். இந்த கலவையுடன் பீன்சை சேர்த்து நன்றாக வதக்கவும்.
அரைத்து வைத்திருக்கும் தேங்காய் துருவலை சேர்க்க வேண்டும். வாசனைக்கு 3 பச்சைமிளகாயை கீறி போடலாம். பின்பு கொத்தமல்லி தழையை தூவி, கிளறி இறக்கவும். இப்போது சுவையான பீன்ஸ் மசாலா குழம்பு ரெடி.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள்: இது சப்பாத்தி, தோசை, இட்லிக்கு சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.