தேவையானவை:
1. பீட்ரூட்
2. கடலைப் பருப்பு
3. காய்ந்த மிளகாய்
4. பூண்டு
5. துருவிய தேங்காய்
6. இஞ்சி
7. பொடியாக நறுக்கிய வெங்காயம்
8. உளுத்தம் பருப்பு
9. உப்பு
10. எண்ணெய்
11. கடுகு
12. உளுத்தம் பருப்பு
13. கறிவேப்பில்லை
செய்முறை:
1. ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய்யை சேர்த்து அதில் பீட்ரூட் நீங்கலாக அனைத்தையும் வறுத்துக் கொள்ளவும்.
2. பின்னர் பீட்ரூட்டை தனியாக பச்சை வாசனை போகும் வரையில் நன்கு வதக்கவும்.
3. பின்னர் மேற்கண்ட இரண்டையும் ஒன்றாகக் கலந்து அரைத்துக் கொண்டு தாளிப்புப் பொருள்களை சேர்க்க இதோ இப்போது சுவையான பீட்ரூட் சட்னி தயார்.
4. இதனை அடிக்கடி செய்து சாப்பிடுவதால் ரத்தம் விருத்தி பெரும்.