தேவையானவை:
சோள மாவு - 1 கப்
சர்க்கரை - 2 1/2 கப்
நெய் - 1/2 கப்
தண்ணீர் - 4 கப் தண்ணீர்
முந்திரி - 3 ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை
புட் கலர்- 1 சிட்டிகை
செய்முறை :
ஒரு பாத்திரத்தில சோள மாவு எடுத்துக்கோங்க. அதில தண்ணீர் சேர்த்து மாவு கட்டியில்லாம கரையும் வரைக்கும், நல்லா கலந்துவிட்றுங்க.
அடுப்பில் ஒரு கடாய் வெச்சி , மிதமான தீயில வெச்சு ,கடாயில் தண்ணீர் சேர்த்துக்கோங்க... அது கூட சர்க்கரை சேர்த்து, சர்க்கரை கரையுற வரைக்கும் நல்லா கிளறிவிடுங்க.
சர்க்கரை முழுசா கரைஞ்சதும், அடுப்பின் தீயை குறைச்சிடுங்க.... கரைச்சு வெச்ச, சோள மாவு கரைசலை கடாயில் சேர்த்துக்கோங்க... கை விடமா தெடர்ந்து நல்லா கிளறிவிட்றுங்க. அல்வா கொஞ்சம் கெட்டியா மாற ஆரம்பிக்கும். சோள மாவு கண்ணாடி மாதிரி மாறும் வரைக்கும் தொடர்ந்து, கிளறிவிடுங்க.
கண்ணாடி பதம் வந்ததும், நெய்யை கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து கிளறி விடுங்க. நெய் நல்லா கலந்து வாசம் வர ஆரம்பிக்கும். இப்போது இது கூட ஏலக்காய் தூள், முந்திரி சேர்த்துக்கோங்க.
எல்லாம் ஒன்னோட ஒன்னு கலந்து வரும் வரைக்கும், கிளறி விடுங்க....இது கூட விருப்பமான புட் கலர் சேர்த்து திரும்பவும், நல்லா கிளறி விடுங்க. ஹல்வா ஜெல்லி போல மாறத் தொடங்கும். அடுப்பை அனைச்சிடுங்க.
ஒரு தட்டு அல்லது ட்ரேயில, கொஞ்சம் நெய் தடவி அதில முந்திரி நறுக்கினது சேர்த்துக்கோங்க.. தட்டில் இந்த ஹல்வாவை மாற்றி கிட்டத்தட்ட 2 மணி நேரம் வரை அப்படியே வெச்சுடுங்க... 2 மணி நேரத்திற்கு பிறகு ஹல்வாவை சின்ன சின்ன துண்டுகளா கட் பண்ணிட்டா, ருசியான பாம்பே ஹல்வா ரெடி!!!
இதுல அலுப்பு பார்க்காம, அல்வா நான் சொன்ன பதம் வர்ற வரைக்கும் நல்லா கிண்டினா மட்டும்தான் அல்வா நான் சொன்ன பதத்துக்கு வரும்.