தேவையானவை:
1. அரிசி
2. பிஞ்சுக் கத்திரிக்காய்
3. தனியா
4. உளுத்தம் பருப்பு
5. கடலைப் பருப்பு
6. பெருங்காயம்
7. கடுகு
8. காய்ந்த மிளகாய்
9. முந்திரிப் பருப்பு
10. நெய்
செய்முறை:
சாதத்தை அதிகம் தண்ணீர் ஊற்றாமல் உதிரியாக வடித்துக் கொள்ளவும் (அரை ஆழாக்கு அரிசி என்றால் ஒரு ஆழாக்கு தண்ணீர் ஊற்றவும்).
ஒரு வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி தனியா, மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம் (சிட்டிகை அளவு) இவற்றை எல்லாம் வறுத்து அரை ஸ்பூன் உப்போடு வைத்துப் பொடி செய்து கொள்ளவும்.
பிறகு அதே வாணலியில் அரை கரண்டி (இங்கு கரண்டி என்பது சற்றே பெரிய ஸ்பூன்) எண்ணெய் விட்டு கடுகைப் போட்டு, அது வெடித்தவுடன் பொடிப் பொடியாக நறுக்கிய கத்திரிக்காய்யைப் போட்டு ஒரு சிட்டிகை உப்பு, மஞ்சள் பொடி இவற்றையும் போட்டு நன்றாக வதக்கவும்.
பாதி வெந்த மாத்திரத்தில் நீங்கள் ஏற்கனவே முன்பு செய்து வைத்திருக்கும் பொடியைப் போட்டு மேலும் கத்திரிக்காய் வேகும் வரை வதக்கி, சாதத்தின் மீது கொட்டி, முந்திரிப் பருப்பையும் (நெய்யில்) வறுத்துக் கொட்டி நன்றாக கலந்து விடவும்.
இதோ இப்போது சுவையான கத்திரிக்காய் சாதம் தயார். இதனை வடக்கே வாங்கீ பாத் என்பார்கள். ஆனால் தோல் பிரச்சனை உள்ளவர்கள் கத்திரிக்காய் போடுவதால் இதனை செய்து சாப்பிடுவது நல்லது அல்ல....