தேவையானவை:
6 முட்டை
4 வெங்காயம்
2 தக்காளி
4 பச்சை மிளகாய்
5 ஸ்லைஸ் சீஸ்
1 டேபிள் ஸ்பூன் மிளகுத்தூள் எண்ணெய் தேவையான அளவு
உப்பு தேவையான அளவு
செய்முறை:
சீஸை நன்கு துருவி வைத்துக் தேவையான வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்
ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி உப்பு மிளகு தூள் வெட்டி வைத்துள்ள வெங்காயம் தக்காளி பச்சைமிளகாய் அனைத்தையும் சேர்த்து நன்றாக அடித்து கலந்து கொள்ளவும்
பின்பு ஒரு தோசை கல்லில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அடைத்து வைத்துள்ள முட்டை கலவையை ஊற்றி இருபுறமும் நான்கு வேக வைத்து எடுக்கவும்.
பின்பு ஒரு புறத்தில் மட்டும் சீஸை தூவி நன்றாக வேகவைத்து எடுத்தால் சுவையான சீஸ் ஆம்லெட் தயார்...