Breaking News :

Sunday, February 23
.

பேரீச்சம் பழ அல்வா செய்வது எப்படி?


தேவையானவை:

கொட்டை நீக்கிய பேரீச்சம் பழம் - 1 கப்
சர்க்கரை - 100 கிராம்
பால் - 1 கப்
கிரீம் - 50 மில்லி கிராம்
கோவா - 100 கிராம்
ஏலக்காய் - 2
முந்திரி - 25 கிராம்
வெள்ளரி விதை - 25 கிராம்

செய்முறை:
பேரீச்சம் பழம், முந்திரி, வெள்ளரி விதையை பொடியாக நறுக்கவும்.
ஒரு மைக்ரோ பாத்திரத்தில் பேரீச்சம் பழத்தை பாலுடன் சேர்த்து மீடியம் பவரில் நான்கு நிமிடம் வேக வைக்கவும்.

பால் கலவை கெட்டியாகும், கோவா, சர்க்கரை சேர்த்து பாதி மூடியவாறு மைக்ரோ ஹையில் 6 நிமிடம் வைக்கவும். இடையில் ஒருமுறை கலந்து விடவும்.

கலவை நன்கு கெட்டியானதும் முந்திரி, வெள்ளரி விதை கலந்து ஹையில் 3 நிமிடம் வைக்கவும். நெய் தடவிய தட்டில் கொட்டி துண்டாக்கவும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.