தேவையானவை:
1கிலோ ஊளி மீன் சுத்தம் செய்தது
1கப்கெட்டியான புளிக்கரைசல்
1/4கப் சின்ன வெங்காயம்
1டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
20 பூண்டு தட்டியது
1/4கப் நல்லெண்ணெய்
1/4 டீஸ்பூன் கடுகு, உளுத்தம்பருப்பு
1/4 டீஸ்பூன் வெந்தயம்
1டீஸ்பூன் மஞ்சள் தூள்
2டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
தேவையானஅளவு உப்பு
சிறிதளவுகறிவேப்பிலை
2டேபிள் ஸ்பூன் பொடியாக கட் செய்த கொத்தமல்லித்தழை
வறுத்து பொடி செய்ய :
1/2டீஸ்பூன்கடலைப்பருப்பு
1/4 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
1டீஸ்பூன் சீரகம்
2டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி
1/4 டீஸ்பூன் வெந்தயம்
1/2டீஸ்பூன் மிளகு,
1/4 டீஸ்பூன் சோம்பு
சிறிதளவுகறிவேப்பிலை
சமையல் குறிப்புகள்
வெறும் வாணலியில் வறுத்து பொடி செய்ய வேண்டிய பொருட்களை தனித்தனியாக வறுத்து பொடி செய்து வைக்கவும். இதை புளிக்கரைசலில் போட்டு, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து கரைத்து வைக்கவும்.
மண் சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம் சேர்த்து வறுத்து வெங்காயம், பூண்டு சேர்த்து சிவக்க வதக்கவும். இதில் கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சிறிது வதக்கி புளிக்கரைசலை ஊற்றி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். கெட்டியானதும் மீன்களை சேர்த்து கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்து சிம்மில் 2 நிமிடம் வைத்து அடுப்பை அணைக்கவும். சாதத்துடன், இட்லி, தோசை உடன் சாப்பிட சுவையாக இருக்கும்....