தேவையானவை:
1/2 பலா பிஞ்சு
2 பெரிய வெங்காயம்
1 தக்காளி
5 பல் பூண்டு
2 பச்சை மிளகாய்
2 வர மிளகாய்
1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
1/2 டீஸ்பூன் மஞ்சள் இஞ்சி டீஸ்பூன் தனியா தூள்
1 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
2 டீஸ்பூன் மிளகு தூள்
1 பட்டை, கிராம்பு
1/2 டீஸ்பூன் சோம்பு
2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
உப்பு தேவையான அளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு எண்ணெய் தேவையான அளவு
செய்முறை::
முதலில் பலாக்காயை தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைத்துக் கொள்ளவும்.
பின் வெங்காயம், தக்காளி, மிளகாய் ஆகியவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு குக்கரில் நறுக்கி வைத்துள்ள பலாக்காய் துண்டுகளை சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள், உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் விட்டு இரண்டு விசில் விட்டு வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, சோம்பு, கிராம்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வர மிளகாய், பூண்டு சேர்த்து தாளிக்கவும்.
பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது, தக்காளி, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
அதன்பிறகு தனியாத்தூள், கரம் மசாலா சேர்த்து வதக்கி, பின் வேகவைத்த பலா துண்டுகளை சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.
பின் மிளகுத்தூள், மல்லி இலை, தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலந்து இரண்டு நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விடவும்.
அவ்வளவுதான் மிகவும் சுவையான பலாக்காய் மிளகு வறுவல் தயார். இந்த பலாக்காய் மிளகு வறுவல் சாதம், சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்..