Breaking News :

Saturday, December 21
.

ஜவ்வரிசி புலாவ் செய்வது எப்படி?


தேவையானவை:

நைலான் ஜவ்வரிசி - 250 கிராம்
பாசிப்பருப்பு - 250 கிராம்
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
முந்திரி - 5
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
தேங்காய் - ஒரு மூடி
பச்சை மிளகாய் - 5
உப்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை

தேவையான‌ பொருட்களைத் தயாராக‌ எடுத்து வைக்கவும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும்
ஜவ்வரிசியுடன் மஞ்சள் தூள் கலந்து மூன்று மணி நேரம் தண்ணீரில் முழ்கும் படி ஊற வைக்க வேண்டும்.

பாசிப்பருப்பை அரை வேக்காடு வேகவைத்து வடிகட்டி வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, முந்திரி, பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

வதங்கிய பிறகு ஊறிய ஜவ்வரிசி, வேக வைத்த பாசிப்பருப்பு மற்றும் உப்பு போட்டு 5 நிமிடங்கள் கிளறவும்.

கடைசியாக தேங்காய்த் துருவல் போட்டு கிளறி இறக்கவும்.

எளிதில் செய்யக்கூடிய சுவையான ஜவ்வரிசி புலாவ் தயார்....

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.