தேவையானவை:
பால் - 1/2 லிட்டர்
FLAVOURED மில்க் - 1/2 லிட்டர்
(STRAWBERRY)
சர்க்கரை - தேவையான அளவு
பாதாம் பிசின் - 4 துண்டுகள்
செய்முறை
பாதாம் பிசின் 4துண்டுகள் போதுமானது.
அதுவே நிறையா வரும்.
காலையிலேயே ஊற வைக்கவும் 6,7 மணி நேரம் ஊற வைத்தால் பாதாம் பிசின் நிறைய கிடைக்கும்.
பாலாடைக்கு, பாலை காய்ச்சவும்.
பால் பொங்கி வரும்போது கிடைக்கும் ஆடையை ஒரு பவுலில் எடுத்து வைக்கவும்.
இப்படியே பால் சுண்டும் வரை செய்யவும்.
டபுள் கீரிம் பால் என்றால் நிறைய பாலாடை கிடைக்கும்.
Flavoured மில்கில் ஏற்கனவே இனிப்பு இருப்பதால் சர்க்கரை உங்கள் தேவைக்கேற்ப சேர்த்துக்கொள்ளவும்.
மறந்து விடாமல் அனைத்தையும் குளிர்சாதான பெட்டியில் வைக்கவும்.
(பாதாம் பிசின் தண்ணிரில்லாமல் வடித்து குளிர்சாதான பெட்டியில் வைக்கவும்) பரிமாரும்போது ஒரு பெரிய கண்ணாடி டம்ளரில் 2ஸ்பூன் ஊறிய பாதாம் பிசின்,flavoured மில்க் ஜார் நிறைய ஊற்றவும் பிறகு தேவையன அளவு பாலாடை சேர்த்து ஸ்பூனால் கலக்க வேண்டும்.
தேவையென்றால் crushed ஐஸ் போட்டுக்கொள்ளலாம்.
flavoured மில்க் எந்த Flavour வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம்.
flavoured மில்க் கிடைக்காவிட்டால்.
பாதாம் எஸன்ஸ்or ரோஸ் எஸன்ஸ் சேர்த்துக்கொள்ளலாம்.
பாதாம் பிசின் Depatment storesல கிடைக்கும்.