Breaking News :

Saturday, December 21
.

கல்யாண ரசம் செய்வது எப்படி?


கல்யாண வீடுகளில் தயாரிக்கப்படும் ரசம் புளி குறைவாகச் சேர்க்கப்பட்டு தக்காளி அதிகமாகச் சேர்க்கப்படுகிறது. ரசம் தயாரித்து முடித்ததும் தாளிப்பு (எண்ணெய்க்குப் பதில்) நெய்யில் வறுத்துச் சேர்க்கப்படுகிறது.

செய்முறை: வெறும் வாணலியில் தனியா - 2 டீஸ்பூன், மிளகு - ஒரு ஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - 6 இதழ்கள் வறுத்து மிக்ஸியில் கொரகொரப்பாகப் பொடிக்க வேண்டும். அடுத்து வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய்விட்டு நறுக்கிய தக்காளி - 2, நறுக்கிய பூண்டுப் பல் - ஒன்று, கறிவேப்பிலை இலைகள் 3 சேர்த்து வறுக்கவும்.

புளிக்கரைசல் - கால் கப், மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், தேவையான அளவு நீர்விட்டு இரண்டு கொதிவிட்டு கால் கப் வெந்து மசிந்த துவரம்பருப்புக் கரைசல் ஊற்றி ஒரு கொதி வந்ததும் பொடித்துவைத்துள்ள பொடியைத் தூவி, இறுதியில் உப்பு சேர்க்கவும். வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய்விட்டு கடுகு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, சீரகம் - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை 3 இதழ்கள் வறுத்து கொதிக்கும் ரசத்தில் சேர்த்து இறக்கவும். பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை சிறிதளவு தூவவும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.