தேவையானவை:
1. சிக்கன்
2. கரம் மலாசா
3. ஏலம்/ பட்டை/ கிராம்பு
4. இஞ்சி/பூண்டு பேஸ்ட்
5. எண்ணெய்
6. கடுகு
7. வெந்தயம்
8. துருவிய தேங்காய்
9. சீரகம்
10. தனியா அல்லது மல்லி விதை
11. மிளகு
12. புளிக்காத தயிர்
13. கொத்தமல்லி இலை
14. காய்ந்த மிளகாய்
15. பெரிய வெங்காயம்
16. தக்காளி
17. உப்பு
செய்முறை:
1. முதலில் சிக்கனை நன்கு சுத்தம் செய்து கழுவி தண்ணீர் இல்லாமல் எடுத்து வைக்கவும்.
2. இப்போது மிளகு, சீரகம், கடுகு, காய்ந்த மிளகாய், முழு மல்லி, வெந்தயம், துருவிய தேங்காய் ஆகிய அனைத்தையும் சேர்த்து இளஞ்சிவப்பாக வறுத்து எடுக்கவும்.
3. பின்னர் மேல் வறுத்து எடுத்த பொருள்கள் அனைத்தும் நன்கு ஆறியதும் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
4. பின்னர் தக்காளி, கொத்தமல்லி, வெங்காயம் ஆகிய அனைத்தையும் பொடியாக நறுக்கி மண் இல்லாமல் கழுவி வைத்துக் கொள்ளவும்.
5. ஒரு கனமான வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை அதில் போட்டு நன்கு வதக்கி, பின்னர் இஞ்சி, பூண்டு, கரம் மசாலா ஆகிய அனைத்தையும் சேர்த்து மேலும் நன்கு வதக்கவும்.
6. நன்றாக வதங்கி வந்த மாத்திரத்தில் தக்காளி, உப்பு சேர்த்து மீண்டும் நன்றாக வதக்கவும்.
7. மேற்கண்ட பொருள்கள் அனைத்தும் நன்கு வதங்கிய மாத்திரத்தில் அரைத்த மசாலா, தயிர் ஆகிய அனைத்தையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்கவிடவும்.
8. பின்னர் அதில் சிக்கனை சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.
9. ஓரளவு கொதி வந்த மாத்திரத்தில் மூடி போட்டு சுமார் இருபது நிமிடம் சிம்மில் வேகவிடவும்.
10. அத்துடன் சிக்கனை அடிக்கடி பிரட்டி விடவும்.
11. சில நேரம் வெந்த மாத்திரத்தில் இப்போது எண்ணெய் தெளிந்து கிரேவி கெட்டியாகி இருக்கும்.
12. இந்த சமயத்தில் உப்பை சரி பார்த்துக் கொண்டு தேவைப்பட்டால் சேர்க்கவும்.
13. சிக்கன் நன்கு வெந்த பின்னர் மல்லி இலைகளை தூவவும்.
14. இதோ இப்போது சூப்பர் சுவையுள்ள குண்டூர் சிக்கன் ரெடி. இதனை புலாவ், சப்பாத்தியுடன் தொட்டு சாப்பிட அருமையாக இருக்கும்.