தேவையானவை:
1 பாக்கெட் மொட்டு காளான்
1 பெரிய வெங்காயம்
2 ஸ்பூன் ஆயில்
1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
1/2 ஸ்பூன் மிளகாய் தூள்
1 டீஸ்பூன் மல்லித்தூள்
1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
1 தக்காளி
1டீ ஸ்பூன் மிளகு சீரகம் சோம்புத்தூள்
மல்லி இலை
தேவையானஅளவு தோசை மாவு
காளான் வெங்காயம் தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கி வைத்த வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி நறுக்கி வைத்த தக்காளி மற்றும் காளான் கூடவே பொடி வகைகளை சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு தண்ணீர் சுண்டும் வரை நன்றாக கொதிக்க விடவும். கடைசியாக கொத்தமல்லி இலைகள் மிளகு சோம்பு, சீரகம் அரைத்த பொடியை தூவி கலக்கவும்.
தோசை கல் சூடானதும் தோசை வார்த்து நடுவில் தயார் செய்த மசாலாவை வைத்து மூடி போட்டு சுட்டெடுத்து பரிமாறலாம்.