தேவையானவை:
சின்ன வெங்காயம் – 15
மிளகு – 2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
சோம்பு – 1/2 டீஸ்பூன்
புதினா – சிறிதளவு
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் – ஒன்று
காய்ந்த மிளகாய் – ஒன்று
கருவேப்பிலை – ஒரு கொத்து
தக்காளி – ஒன்று
இஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
மல்லித்தூள் – ஒரு டீஸ்பூன்
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மஸ்ரூம் – 350 கிராம்
கொத்தமல்லி தழை – சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், சோம்பு, புதினா இவற்றை சேர்த்து நன்றாக நைசா விழுதுபோல அரைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் பெரிய வெங்காயத்தை சேர்க்க வேண்டும்.
அடுத்ததாக அதில் காய்ந்த மிளகாய், கருவேப்பிலை இவற்றை சேர்த்து வெங்காயம் வதங்கும் வரை நன்றாக வதக்க வேண்டும். பிறகு தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட் இவற்றையும் சேர்த்து இதன் பச்சை வாடை போகும் வரை நன்றாக வதக்க வேண்டும். அடுத்ததாக இதில் மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, தேவையான அளவு உப்பு இவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.
பிறகு நாம் அரைத்து வைத்திருக்கும் விழுதை இதனுடன் சேர்த்து சிறிதளவு மிக்ஸி ஜாரில் தண்ணீர் ஊற்றி அதையும் கழுவி இதனுடன் சேர்த்து மூன்று நிமிடம் நன்றாக வதக்க வேண்டும். மூன்று நிமிடம் கழித்து நறுக்கி வைத்திருக்கும் மஷ்ரூமை சேர்த்து இரண்டு நிமிடம் நன்றாக கலந்து விட்டுக் கொள்ளுங்கள். பிறகு மூடி போட்டு பத்து நிமிடம் வேக விடுங்கள்.
பத்து நிமிடம் கழித்து மூடியை திறந்து கொத்தமல்லி தழையை தூவி நன்றாக கிளறி இறக்கி விட வேண்டும். மிகவும் சுவையான மஸ்ரூம் பெப்பர் மசாலா தயாராகி விட்டது.