தேவையானவை:
1/4 கிலோ நாட்டுக்கோழி
30நறுக்கிய சின்ன வெங்காயம்
2நறுக்கிய தக்காளி
1 டீஸ்பூன் தனியாத்தூள்
1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
உப்பு
2 டேபிள்ஸ்பூன் நெய்
2 பட்டை
3 லவங்கம்
கொத்தமல்லி இலை
3 கப் தண்ணீர்
அரைக்க
2 டீஸ்பூன் மிளகு
1 டீஸ்பூன் சீரகம்
10 பூண்டு பல்
செய்முறை :
முதலில் மிக்ஸியில் மிளகு சீரகம் பூண்டு காரத்திற்கு தேவையெனில் பச்சை மிளகாய் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
குக்கரில் நெய் ஊற்றி சூடானதும், பட்டை, லவங்கம் சேர்க்கவும் பிறகு நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்ளவும் வெங்காயம் வதங்கிய பிறகு தக்காளி சேர்த்து தக்காளி மசியும் வரை வதக்கவும்.
பிறகு நாட்டுக்கோழி, அரைத்து வைத்த மசாலா, மஞ்சள்தூள் சேர்க்கவும்
இதனுடன் தனியாத்தூள், உப்பு சேர்த்து 2 நிமிடம் மிதமான தீயில் வதக்கி 3 கப் தண்ணீர் விட்டு மிதமான தீயில் 3 விசில் விடவும்.
குக்கர் விசில் அடங்கியதும் இறுதியாக கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.