பாசுமதி அரிசி - 200 கிராம்
பச்சைப்பட்டாணி - 50 கிராம்
தேங்காய் - 1/2 மூடி
பட்டை -2 சிறிய துண்டு
சோம்பு - 1 டீஸ்பூன்
கிராம்பு, ஏலக்காய் -3
+ பிரிஞ்சு இலை -2
சீரகம் - 1 டீஸ்பூன்
வெள்ளைப்பூண்டு - 6 பல்
இஞ்சி - சிறிதளவு சிறிதளவு
வெங்காயம் - 1 1
பச்சை மிளகாய் - 3 3
நெய் - சிறிதளவு சிறிதளவு
தக்காளி -11
+ உப்பு - தேவையான அளவு தேவையான அளவு
செய்முறை:
1. பாசுமதி அரிசியை ஒன்றுக்கு இரண்டு முறை நன்றாகக் கழுவி எடுத்துக் கொள்ளவும்.
2. தேங்காயை சிறிய துண்டுகளாக்கி மிக்சியில் போட்டு அதிகம் தண்ணீர் சேர்க்காமல் பால் எடுக்கவும்.
3. அரிசியை போல் இரண்டு பங்கு தேங்காய் பால் எடுத்து அதில் சிறிது நேரம் ஊறவைக்கவும்.
4. வெங்காயத்தையும் 3 பூண்டையும் நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
5. மீதமுள்ள 3 பூண்டில் இரண்டை முழுதாக வைத்துக் கொண்டு ஒரு பூண்டுடன் இஞ்சி சேர்த்து நசுக்கிக் கொள்ளவும்.
6. இப்போது வாணலியில் நெய் ஊற்றி பட்டை, சோம்பு, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சு இலை, தட்டிய பூண்டு இஞ்சி விழுது, நறுக்கிய வெங்காயம், பூண்டு, கீறிய பச்சை மிளகாய் என அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு வதக்கவும்.
7. பின்னர் நன்றாக வதங்கியவுடன் பச்சை பட்டாணி, நறுக்கிய தக்காளி என அனைத்தையும் சேர்த்துச் சிறிது நேரம் கிளறவும்.
8. ஊறவைத்த அரிசி கலவையுடன் இந்தக் கலவையையும் உடன் உப்பு சேர்த்து குக்கரில் வேக வைத்து எடுக்கவும்.
9. பின்னர் பிரியாணி பதத்திற்கு வெந்தவுடன் இறக்கி வைத்துப் பரிமாறவும்.
10. இந்த பட்டாணி சாதம் பிரியாணி போன்ற சுவையில் இருப்பதால் இதனை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
பச்சை பட்டாணியில் மாங்கனீஸ், இரும்புச் சத்து, போலேட் மற்றும் தயமின் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதன் அதிகமான நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரிகள் உடல் எடையை குறைக்க பயன்படுகிறது.