தேவையானவை:
1/2 கப் கொண்டைக்கடலை 5 கத்தரிக்காய் 3 தக்காளி 1/2 கப் சின்ன வெங்காயம் 4 வர மிளகாய் 1 டீஸ்பூன் சீரகம் 1 டீஸ்பூன் தனியா 1/4 டீஸ்பூன் மிளகு 1/4 டீஸ்பூன் வெந்தயம் 1/4 தனியா 1/4 தேங்காய் துருவல் புளி எலுமிச்சை அளவு 1 கொத்து கறிவேப்பில்லை உப்பு தேவையான அளவு எண்ணெய் தேவையான அளவு தாளிக்க : 1/2 டீஸ்பூன் கடுகு 1 கொத்து கறிவேப்பில்லை 10 சின்ன வெங்காயம்
செய்முறை:
முதலில் கொண்டைக்கடலையை நன்கு கழுவி இரவு முழுதும் ஊற வைத்துக் கொள்ளவும். பின் இதனை குக்கரில் ஐந்து விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும்.
வெங்காயம், கத்தரிக்காய், தக்காளி ஆகியவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தனியா, சீரகம், வெந்தயம், மிளகு, கறிவேப்பிலை, வர மிளகாய், நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
பின்னர் தேங்காய் துருவல், மஞ்சள் தூள், சேர்த்து நன்கு வதக்கி ஆற விடவும். பின் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளவும்.
பின் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கத்தரிக்காய் சேர்த்து வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பின் ஒரு மண் பாத்திரத்தை அடுப்பில் வைத்து வேக வைத்த கொண்டைக்கடலையை சேர்த்து பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கலந்து விடவும்.
குழம்பு சிறிது கொதித்ததும் வதக்கி வைத்துள்ள கத்தரிக்காயை சேர்த்து, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் விட்டு மூடி வைத்து கொதிக்க விடவும்.
குழம்பு நன்கு கொதித்ததும் அடுப்பை அணைத்து விடவும். பின் ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம் சேர்த்து தாளித்து குழம்பில் சேர்த்து கலந்து விடவும்.
அவ்வளவுதான் மிகவும் சுவையான கொண்டைக்கடலை கத்தரிக்காய் கார குழம்பு தயார். இந்த குழம்பு பாரம்பரிய ருசியில் இருக்கும்.....