Breaking News :

Sunday, May 04
.

வத்தக் குழம்பு செய்வது எப்படி?


தேவையானவை:

புளி - ஒரு கைப்பிடி அளவு
சின்ன வெங்கயம் - 10
பூண்டு - 10
சுண்டைக்காய் வத்தல் - ஒரு கைப்பிடி அளவு
மணத்தக்காளி வத்தல் - ஒரு கைப்பிடி அளவு
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் பொடி - சிறிது
கடுகு - சிறிதளவு
உளுந்தம் பருப்பு - சிறிது
வறுத்து அரைக்க:::
காய்ந்த மிளகாய் - 5  அல்லது 6
மல்லி விதை - 2  டேபிள் ஸ்பூன்
துவரம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீ ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
வெந்தயம் - 10 எண்ணம்

செய்முறை:
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு மல்லி விதை,துவரம் பருப்பு, மிளகு, கறிவேப்பிலை, வெந்தயம், சீரகம் , காய்ந்த மிளகாய் இவை  அனைத்தையும் நன்கு சிவக்க(பிரவுன்) வறுக்க வேண்டும்.
வறுத்த பொருட்கள் ஆறிய பிறகு 3 அல்லது 4 சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு மைய (மசிய) அரைத்து கொள்ளவும்.

வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு சுண்டக்காய் வத்தல்,மணத்தக்காளி வத்தல் இவற்றை தனித் தனியாக வறுத்து பின்பு  வாணலியில் இருந்து எடுத்து தனியாக எடுத்து விடவும்.
அதே எண்ணெய்யில் கடுகு, உளுந்து தாளிக்கவும். பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு அதனுடன் புளி, உப்பு சேர்த்து கரைத்து வடிகட்டி வதங்கிய பூண்டு,வெங்காயத்துடன் சேர்த்து விடவும். மஞ்சள் பொடி சேர்க்கவும்.

இதனுடன் அரைத்த விழுது சேர்க்கவும். கொதிக்கும் போது வறுத்து வைத்த வத்தல் வகைகளை சேர்க்கவும். கொதிக்கும் பொழுது 2 டேபிள் ஸ்பூன் நல்ல எண்ணெய் விடவும். நன்கு  வற்றிய பிறகு இறக்கவும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.