Breaking News :

Friday, May 02
.

10 வகையான வெஜ் குருமா செய்துவது எப்படி?


1- காய்கறி குருமா..

தேவையான பொருட்கள்:
காய்கறி கலவை (கேரட், பீன்ஸ், உருளை, பட்டாணி, சன்னா) - 2 கப்
பெரிய அளவு வெங்காயம் - 1
பெரிய அளவு தக்காளி - 2
உப்பு - தேவையான அளவு
அரைக்க 1:
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - 1 சிறு துண்டு
பூண்டு - 3 பல்
சோம்பு - 1/4 தேக்கரண்டி
அரைக்க 2:
தேங்காய் துருவல் - 1/2 கப்
முந்திரி - 5
பொரிகடலை - 1 தேக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
பட்டை - சிறு துண்டு
லவங்கம் - 2
ஏலக்காய் - 2

செய்முறை:
காய்கறிகளை சிறு துண்டுகளாக நறுக்கி வேக வைத்து வைக்கவும்.
அரைக்க 1’ல் இருப்பவற்றை தனியாகவும், 2’ல் இருப்பவற்றை தனியாகவும் நைசாக அரைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும்.
இதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி பின் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
இதில் பச்சை மிளகாய் சேர்த்து அரைத்த கலவை சேர்த்து பச்சை வாசம் போக வதக்கவும்.
நன்றாக வதங்கியதும் வேக வைத்த காய்கறி கலவை மற்றும் தேங்காய் மசாலா, உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு எடுத்து பரிமாறவும்.


2- வெள்ளை குருமா...

தேவையான பொருட்கள்:
பீன்ஸ் - 5
கேரட் - 1 பெரிது
உருளை - 1 பெரி்து
பச்சை பட்டாணி - ஒரு கை அளவு
வெங்காயம் - 1 பெரிது
பச்சை மிளகாய் - 6
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 4 பல்
மல்லி - 1 மேசைக்கரண்டி
புதினா - 1 மேசைக்கரண்டி
பட்டை - 1 துண்டு
லவங்கம் - 3
ஏலக்காய் - 2
பிரியாணி இலை - 1
தேங்காய் துருவல் - 1/4 கப்
முந்திரி - 10
பால் - 1/2 கப்
கசகசா - 1 மேசைக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
கசகசா மற்றும் முந்திரியை வெது வெதுப்பான 1/4 கப் பாலில் ஊற விடவும். ஊறியதும் தேங்காய் துருவல் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
இஞ்சி பூண்டு தோல் நீக்கி பச்சை மிளகாய் 3 சேர்த்து அரைக்கவும்.
வெங்காயம் நீளவாட்டில் நறுக்கி வைக்கவும்.
பச்சை மிளகாய் மீதம் உள்ளதையும் நறுக்கி வைக்கவும்.
புதினா கொத்தமல்லி பொடியாக நறுக்கவும்.
உருளை, பீன்ஸ், கேரட் நறுக்கி வைக்கவும்.
பட்டாணியை ஊற விட்டு வேக வைத்து எடுக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காந்ததும் பிரியாணி இலை, பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.
இதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வத்க்கவும். வெங்காயம் பாதி வதங்கியதும் இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் விழுது சேர்த்து வதக்கவும்.
பின் நறுக்கிய காய் அலவை சேர்த்து உப்பு சேர்த்து வதக்கவும். தேவையான நீர் விட்டு மூடி வேக விடவும்.
காய் வெந்ததும் அரைத்த முந்திரி தேங்காய் கசகசா விழுது சேர்த்து தேவைக்கு நீர் விட்டு கொதிக்க விடவும்.
மசாலா வாசம் போக கொதித்ததும் மீதம் உள்ள பால் சேர்த்து ஒரு கொதிவிட்டு புதினா கொத்தமல்லி இலை தூவி இறக்கி பரிமாறவும்.


3- வெஜ் குருமா...
தேவையான பொருட்கள்:
கேரட் - 1
உருளை - 1
பீன்ஸ் - 10
காலிஃபிளவர் - சிறிது
வெங்காயம் - 1
தக்காளி - 1
இன்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
கறிமசால்பொடி - 2 தேக்கரண்டி
மஞ்சள்பொடி - 1/4 தேக்கரண்டி
கொத்தமல்லி, புதினா -1 கைப்பிடி அளவு
உப்பு - தேவையான அளவு
அரைக்க:
தேங்காய்துறுவல் - 1/4 கப்
பொட்டுகடலை - 2 தேக்கரண்டி
முந்திரி - 5
சோம்பு - 1/4 தேக்கரண்டி
தாளிக்க:
எண்ணை - 2 தேக்கரண்டி
பிரியாணி இலை - 1
பட்டை - 2
கிராம்பு - 2
ஏலம் -2

செய்முறை:
காய்களை வேண்டிய அளவில் நறுக்கி வேகவைக்கவும்.
அரைக்க குடுத்தவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.
கொத்தமல்லி, புதினா பொடியாக நறுக்கவும்.
வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்கவும்.
வாணலியில் எண்ணை ஊற்றி தாளிப்பதை போட்டு வெங்காயம் போட்டு நன்குவதக்கவும்.
இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கி தக்காளி சேர்க்கவும்.தக்காளி வதங்கியவுடன் கறிமசால்பொடி.மஞ்சள்பொடி,கொத்தமல்லி,புதினா போட்டு நன்கு வதக்கி வேகவைத்த காய்களை போடவும்.
உப்பு போட்டு நன்கு பிரட்டிவிட்டு அரைத்ததை ஊற்றி நன்கு கலந்துவிட்டு சிறிது தண்ணீர் ஊற்றி முடிவைத்து வேகவிடவும்.குருமா திக்கானவுடன் உப்பு சரிபார்த்து இறக்கி பரிமாறவும்.


4-ஸ்பைசி காய்கறி குருமா...

தேவையான பொருட்கள்:
காய்கறி கலவை ( கேரட், பீன்ஸ், பட்டாணி, கிழங்கு) - 2 கப்
வெங்காயம் - 1/2 கப்
தக்காளி - 3
தயிர் - 1 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
புதினா - 4 இலைகள்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
அரைக்க:
தேங்காய் துருவல் - 1/4 கப்
இஞ்சி - சிறியதுண்டு
பூண்டு - 4 பல்
மிளகாய் வற்றல் - 6
பட்டை - சிறியதுண்டு
சோம்பு - 1/4 தேக்கரண்டி
சீரகம் - 1/4 தேக்கரண்டி
மிளகு - சிறிதளவு
தனியா - 2 தேக்கரண்டி
கசகசா - சிறிதளவு
கிராம்பு - 3

செய்முறை:
முதலில் வாணலியில் மிளகாய் வற்றல், பட்டை, சோம்பு, சீரகம், மிளகு, தனியா, கசகசா, கிராம்பு எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
பின் தேங்காய், இஞ்சி, பூண்டு சிறிதளவு தண்ணீர் விட்டு நைசாக அரைக்கவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியவுடன் கறிவேப்பிலை, தக்காளி போட்டு வதக்கவும்.
பின் தயிர், அரைத்த விழுதை போட்டு வதக்கவும்
பின் நறுக்கிய காய்கறிகள், தண்ணீர், மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு போட்டு மூடிப்போட்டு வேகவிடவும்.
கடைசியில் கொத்தமல்லி இலை, புதினா தூவி இறக்கி பரிமாறவும்.


5-வெஜிடபிள் குருமா..

தேவையான பொருட்கள்:
கேரட், காலிஃப்ளவர், பீன்ஸ், பட்டாணி - 1 1/2 கப்
நெய்/எண்ணெய் - 3 தேக்கரண்டி
பெருஞ்சீரகம் - 3/4 தேக்கரண்டி
ஏலக்காய் - தலா 3
கிராம்பு - தலா 3
பட்டை - தலா 3
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3
தக்காளி - 1
புதினா - 10 இலைகள்
தேங்காய் துருவல் - 1 கப்
ஊறவைத்த முந்திரிப்பருப்பு - 10

செய்முறை:
முதலில் காய்கறிகளை பொடியாக நறுக்கி உப்பு சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
பிறகு நெய்யை காயவைத்து அதில் பெருஞ்சீரகம் சேர்த்து வெடித்ததும் பட்டை, ஏலக்காய், கிராம்பு சேர்த்து வதக்கி நன்கு வாசனை வந்ததும் வெங்காயம், மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
அதனுடன் தக்காளி, புதினா சேர்த்து வதக்கவும். அதன் பின் தேங்காய் துருவலையும், முந்திரிப்பருப்பையும் மையாக அரைத்து ஊற்றவும். குழம்பு கொதித்து கெட்டியானதும் இறக்கி பரிமாறவும்.

6-தக்காளி குருமா...

தேவையான பொருட்கள்:
தக்காளி - 2 அல்லது 3 பெரியது
வெங்காயம் - 1
கொத்தமல்லி நறுக்கியது - 1/4 கப்
புதினா - 5 இலை
பச்சை மிளகாய் - 2
சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி
கரம் மசாலா - 1/4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
முந்திரி - 8
பட்டை - ஒரு சிறு துண்டு
லவங்கம் - 2
ஏலக்காய் - 1
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பாதி வெங்காயம் சேர்த்து வதக்கவும். இத்துடன் 1 1/2 தக்காளி சேர்த்து வதக்கவும்.
கடைசியாக கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கி மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.
மீண்டும் அதே பாத்திரத்தில் மீதம் உள்ள எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து மீதம் உள்ள பாதி வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் பாதி தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
குழைந்து வந்ததும் தூள் வகை எல்லாம் சேர்த்து பிரட்டி சிறிது நீர் விடவும்.
அரைத்த வெங்காய தக்காளி விழுது சேர்த்து தேவையான நீர் விட்டு தூள் வாசம் போக கொதிக்க விடவும்.
நன்றாக கொதித்து எண்ணெய் பிரியும் போது ஊற வைத்த முந்திரியை அரைத்து ஊற்றவும்.
நன்றாக கொதித்து குருமா பதம் வந்ததும் கொத்தமல்லி சிறிது தூவி பரிமாறவும்


7-இடியாப்பத்திற்கான வெஜ் குருமா

தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 1
கேரட் - 1
பீன்ஸ் - 5
பச்சை பட்டாணி - 10
பெரிய வெங்காயம் - 3
பச்சை மிளகாய் - 2
தக்காளி - 4
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
தனியா தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 3 மேசைக்கரண்டி
முந்திரி - 10
கசகசா - 2 தேக்கரண்டி
தயிர் - 1 டம்ளர்
ஏலக்காய் - 1
கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
பட்டை - சிறிது
கிராம்பு - 2
எண்ணெய் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு எல்லாவற்றையும் மிகவும் பொடியாக நறுக்கி, பட்டாணியுடன் சேர்த்து வேக வைக்கவும்.
பச்சை மிளகாயை நீள்மாகவும்,வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும்.
தேங்காய் துருவல், முந்திரி, கசகசா மூன்றையும் சேர்த்து நைசாக அரைக்கவும்.
வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின் தக்காளி, மிளகாய் தூள், தனியா தூள், அரைத்த மசாலா, மஞ்சள் தூள், வேக வைத்த காய்கறிகள், உப்பு, எல்லாவற்றையும் சேர்த்து வதக்கவும்.
குருமா நன்கு திக்காக வந்ததும் கடைந்த தயிர் சேர்த்து, சிறிது நேரம் கொதித்த பின் இறக்கி, இடியாப்பத்துடன் பரிமாறவும்.


8- குருமா....

தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
வர மிளகாய் - 3 / 4
தேங்காய் - 4 கீத்து
பொட்டுக்கடலை - 1 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி

செய்முறை:
கடாயில் ஆயில் ஊற்றி பெரிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி வர மிளகாய், தேங்காய் கீத்து, பொட்டுக்கடலை, சோம்பு அரைத்த விழுது சேர்த்து கொதி விட்டு உப்பு மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசம் போனவுடன் இறக்கி பரிமாறவும்.


9- பரோட்டா குருமா....

தேவையான பொருட்கள்:
காரட் - 100 கிராம்
பீன்ஸ் - 100 கிராம்
பச்சைபட்டாணி - 100 கிராம்
உருளை கிழங்கு - 2
வெங்காயம் - 2 பெரியது
தக்காளி - ஒன்று நறுக்கியது
கறிவேப்பிலை - சிறிதளவு
தேங்காய் - ஒரு மூடி
கிராம்பு - 2
பட்டை - சிறிதளவு
மல்லிதூள் - 2 தேக்கரண்டி
மிளகாய்தூள் - ஒரு தேக்கரண்டி
இஞ்சி - அரை தேக்கரண்டி
பூண்டு - அரை தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
காரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு இவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
இதனுடன் பச்சைபட்டாணி சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். துருவிய தேங்காயை அரைத்து கொள்ளவும்.
வாணலியில் வதக்க தேவையான அளவு எண்ணெய் விட்டு எண்ணெய் சூடானதும் பட்டை, கிராம்பு சேர்த்து அதனுடன் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.
பிறகு மல்லித்தூள், மிளகாய்தூள், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
அத்துடன் வேக வைத்த காயை சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வதக்கவும்.
பிறகு அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து அதற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி பரிமாறவும்.


10- தக்காளி குருமா.....

தேவையான பொருட்கள்:
தக்காளி - 3
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3
அரைத்த தேங்காய் விழுது - 2 கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
உப்பு, கொத்தமல்லித் தழை - தேவைக்கு
தாளிக்க:
ஏலம், பட்டை, கிராம்பு, சோம்பு, அன்னாசிப்பூ, பிரியாணி இலை, புதினா, எண்ணெய்

செய்முறை:
எண்ணெயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, நறுக்கிய தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
பின் கரம் மசாலா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, வெந்ததும், தேங்காய் விழுது சேர்க்கவும்.
தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
கொத்தமல்லித் தழை தூவி இறக்கி பரிமாறவும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.