தேவையானவை:
1கப் மொச்சை
5வெண்டைக்காய்
1/2 பத்தை மஞ்சள் பூசணிக்காய்
1/2சக்கரை வள்ளி கிழங்கு
1அடக்கு மாங்காய்
1துண்டு புடலங்காய்
5அவரைக்காய்
2எலுமிச்சை அளவு புளி
உப்பு
2டீஸ்பூன் சாம்பார் மிளகாய்த்தூள்
1/2டீஸ்பூன் மஞ்சள் தூள்
1/2கப் வெந்த துவரம் பருப்பு
தாளிக்க:
3டீஸ்பூன் ஆயில்
1டீஸ்பூன் கடுகு
2வரமிளகாய் கிள்ளியது
சிறிதுகறிவேப்பிலை
சிறியஎலுமிச்சை அளவு வெல்லம்
செய்முறை
தோலுடன் இருக்கும் மொச்சை பருப்பை வாங்கி தோல் நீக்கி எடுத்து வைக்கவும்.1/2 பத்தை மஞ்சள் பூசணிக்காயை தோல் நீக்கி நறுக்கி வைக்கவும். புடலங்காய் ஒரு சிறிய துண்டு, 5 அவரைக்காய், 5 வெண்டைக்காய் எடுத்து வைக்கவும்.
2 எலுமிச்சை அளவு புளியை தண்ணீரில் ஊறவைத்து கெட்டியாக கரைத்து வடித்து வைக்கவும்.2 அடக்கு மாங்காய், 1 துண்டு புடலங்காய், 1/2 சர்க்கரைவள்ளி கிழங்கு, 5வெண்டைக்காய்,5 அவரைக்காய் நறுக்கி எடுத்து வைக்கவும்.
கடாயில் 3 டீஸ்பூன் ஆயில் விட்டு,1 டீஸ்பூன் கடுகு,
2 வரமிளகாய் கிள்ளியது, சிறிது கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய காய்கறிகளை சேர்த்து நன்கு வதக்கி,2 டீஸ்பூன் சாம்பார் மிளகாய்த்தூள், 1/2டீஸ்பூன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கலக்கி விடவும். கரைத்து வைத்த புளியை ஊற்றி கொதிக்க விடவும்.
1/2 கப் வெந்த துவரம் பருப்பை கொதிக்கும் குழம்பில் ஊற்றி நன்கு கலக்கி விடவும். சிறிய எலுமிச்சை அளவு வெல்லத்தை சேர்த்து கலக்கி கொதிக்க விடவும்.
சுவையான ஏழு வகை காய்கறி புளி குழம்பு ரெடி...
விரத நாட்களில் செய்யும் குழம்பு மிகவும் சுவையாக இருக்கும்.