இந்த மாதிரி கேள்விகளுக்கு ஒருவருடைய வயது திருமணமானவரா , சர்க்கரை வியாதி போன்ற உடல் உபாதைகள் உள்ளனவா, என்ன சோப்பு பயன்படுத்துகிறார் , எத்தனை நாளைக்கு ஒருமுறை உடலுறவு செய்கிறார் , மனைவிக்கு தொற்று இருக்கிறதா? இத்தனை கேள்விகளுக்கும் பதில் கிடைத்த பின் முறையான தீர்வு சொல்ல முடியும்.
தம்பதியர் இருவரும் உடல் ஆரோக்கியத்துடன் இருந்தாலும் அவர்களுடைய தாம்பத்திய உறுப்பில் இருக்கும் நுண்கிருமிகள் வேறு வேறு. அவரவருக்கு அது சொந்தமானது பழக்கமானது தொந்தரவு செய்யாது என்றாலும் அந்த உறுப்புடன் உறவாடும் இன்னொரு மனிதனுக்கு அது தொந்தரவு செய்யலாம்.
திருமணமான புதிதில் முதல் ஒரு மாதம் தம்பதியர் இருவருக்கும் நீர்க்கடுப்பு வருவது சகஜம். இதை தேன்நிலவு நீர்க்கடுப்பு-. Honeymoon cystitis -என்று சொல்வார்கள். தொடர்ந்து இருவரும் உடலுறவில் இந்தக் கிருமிகளை பகிர்ந்து கொண்டால் அது சில நாட்களில் பழக்கமான தாகி விடும். அதற்குப் பின் அது இருவரையும் தொந்தரவு செய்யாது.
ஏதோ காரணத்தால் பத்து நாட்கள் உடலுறவு செய்யவில்லை என்றால் கிருமிகள் சொந்தம் மறந்து மீண்டும் உடலுறவு செய்யும் பொழுது பொழுது கிருமிகள் சண்டை போட ஆரம்பிக்கும்.
இந்த அனுபவம் உங்களுக்கும் இருக்கும் என்று நினைக்கிறேன்.
இந்த தீராத சண்டையால் அந்த பகுதியில் உள்ள தோல் சகஜ நிலை மாறி கெட்டியாகிவிடும்.
இந்த அனுபவம் பெண்ணுக்கும் இருக்கும் ஆனால் அது அதிகமாக ஏதோ ஒரு ஆளை தான் பாதிக்கிறது . இங்கே இவர் விஷயத்தில் ஆணை பாதித்திருக்கிறது.
அதிகபட்சமாக பெண்கள் தான் இந்த மாதிரி பிரச்சனைக்கு உள்ளவர்கள்.
உள்ளாடைகளுக்கு உபயோகிக்கும் சோப்பு மற்றும் எந்த பொருளும் உங்களுக்கு ஒவ்வாமையை உண்டாக்கலாம்.
நீண்ட நாட்கள் உடல் உறவு அல்லது சுய இன்பம் செய்யாமல் இருந்தால் விந்து கசிந்து தோலின் அடியில் தங்குவதால் தோல் பழுதடைந்து கிருமித் தொற்றுக்கு உள்ளாகலாம்.
இப்படி பல காரணங்கள் உள்ளன.
தக்க மருத்துவரை பாருங்கள்.