Breaking News :

Tuesday, April 15
.

நடிகர் விவேக்கிற்கு இரத்த நாளங்களில் 100% அடைப்பு எப்படி ?


இது ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எழுதப்பட்ட பதிவு மட்டுமே அன்றி.. வேறு காரணம் இல்லை..

விவேக் அவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருந்தது left anterior descending coronary artery எனப்படும். இருதயத்தின் இடது பக்கம் ஓரமாக உள்ள தமனி ஆகும்.
இதை widow maker coronary artery விதவைகளை உண்டாக்கும் இருதய தமனி என்று சொல்வார்கள் மருத்துவர்கள். ஏனெனில் இறப்பு விகிதம் ரொம்ப அதிகம்.

மற்ற இரத்த தமனிகளில் ஏற்படும் அடைப்பை நீக்க ஆஞ்சியோ பிளாஸ்டி செய்வது போல.. இந்த இடது பக்கம் கரோனரி தமனியில் அடைப்பு ஏற்பட்டால்.. உயிர் பிழைப்பது மிகவும் சிரமம்.  காரணம்.. இது மிகவும் குறுகிய அளவு கொண்டது.. அடைப்பு ஏற்பட்ட உடனே.. மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் குறைந்து போய்.. மூளை.. கோமா நிலை அடைவது மிகச் சீக்கிரம் நடப்பது பெரிய தொந்தரவு ஆகும்..

மத்திய வயதுகளில் ஆண்களுக்கு ஏற்படும்.. உயிருக்கு ஆபத்தான மாரடைப்பு.. பெரும்பாலும் இடது கரோனரி தமனியில் தான் இருக்கும்… எவ்வளவு சீக்கிரம் மருத்துவ உதவி கிடைக்கிறதோ அவ்வளவு சதவிகிதம் உயிர் பிழைக்க வாய்ப்பு உள்ளது..

இன்னும்.. ஏற்கனவே சர்க்கரை நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக கொலஸ்ட்ரால் ட்ரைகிளிசரைட் தொந்தரவு இருந்து மாத்திரைகள் சரியாக எடுத்து கொண்டு இருப்பவர்களுக்கு.. மாரடைப்பு ஏற்பட்டால் கூட இறப்பு விகிதம் குறைவாக இருக்கும்..என்பது நிச்சயம். ஏனெனில்.. தமனியில் ஏற்படும் கொழுப்பு படிமானத்தை இந்த மாத்திரைகள் குறைக்கும் தன்மை கொண்டது.

இந்த தொந்தரவு களில் இருந்து காக்கும் பொருட்டு தான்.இரத்தமெலிவு மருந்துகள் ஆஸ்பிரின் மற்றும் க்ளோப்டோக்ரல்.. ஃபீனோ ஃபைப்ரேட்.. ஸ்டேட்டின் வகை மருந்துகளை கொடுப்பார் மருத்துவர்.

அதனால்.. இது போன்ற மருந்துகளை எடுப்பவர்கள்.. உயிர் பிழைக்க வாய்ப்பு அதிகம்..வருடம் தோறும்.. ஈசிஜி ட்ரட்மில் டெஸ்ட்.. எக்கோ கார்டியோகிராம் மற்றும் தேவையான இரத்த பரிசோதனை செய்து உங்கள் இதயத்தின் செயல்பாட்டை கண்காணிப்பு செய்துகொள்ள வேண்டும். நாற்பது வயதை அடைந்த நபர்கள்.. மதுப்பழக்கம்; புகைப்பழக்கம்கூடாது..

ஏற்கனவே.. மிதமான சர்க்கரை நோய்.. மற்றும் உயர் ரத்த அழுத்தம் இருக்கும் போது மருத்துவ உதவி இன்றி இயற்கை முறையில் அதைக் கட்டுப்படுத்த போகிறேன் என்று முயற்சி செய்பவர்கள் மாரடைப்பு பற்றி அதிககவனமாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது..

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.