நம்முடைய முன்னோர்கள் காலத்தில் திருமணம் செய்து கொள்ளும் ஆண், பெண் இருவருக்கும் இடையே அதிக வயது இடைவெளி இருந்தது. நம்முடைய வீடுகளில் கூட தாத்தா, பாட்டிக்கு அப்படி நடந்திருக்கலாம்.
அதன்பிறகு சம வயதுடையவர்களை திருமணம் செய்ய ஆரம்பித்து, சமீப காலங்களில் ஆண்கள் தங்களுடைய வயது ஒத்த பெண்களைக் காட்டிலும் கூட , வயதில் மூத்த பெண்களை திருமணம் செய்து கொள்ள அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.
அப்படி செய்து கொள்வதால் உளவியல் ரீதியாகவும் வாழ்க்கையிலும் அவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கின்றன என்று பார்க்கலாம்.
தங்களை விட மூத்த பெண்களைத் திருமணம் செய்கிற போது, இயல்பாகவே அந்த பெண்ணுக்கு வாழக்கைப் பற்றி நிறைய அனுபவங்களைக் கேட்டும், பெற்றும் இருப்பார்கள்.
அதனால் அப்படியொரு திருமணம் செய்வதன் மூலம் நீங்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல அனுபவசாலியுடன் பயணிப்பது போன்ற உணர்வைப் பெறுவீர்கள்.
வயதில் மூத்த பெண்கள் இயல்பாகவே தன்னை விட வயது குறைந்தவர்களிடம் அதிக அன்புடன் நடந்து கொள்வார்கள்.
அப்படி தன்னுடைய கணவரே தன்னை விட வயதில் குறைந்தவராக இருக்கும்போது, அவர் தன் கணவரை ஒரு குழந்தை போலவே பார்க்க ஆரம்பித்துவிடுவார். அவர் மீதான அக்கறையும் அன்பையும் அதிகமாகக் காட்டுவார்.
உங்களை விட மூத்த பெண்ணை நீங்கள் திருமணம் செய்து கொள்ளும் போது, அவர் உங்களுக்கான விஷயங்களில் அதிகமாக தலையிட மாட்டார். உங்களுக்குப் போதிய சுதந்திரம் கொடுப்பார். உங்களுக்குப் பிடித்த விஷயங்களைச் செய்ய அனுமதி கொடுப்பார்.
உங்களுடைய வயதைக் கடந்து தான் அவர் வந்திருக்கிறார் என்பதால், உங்களுடைய விருப்பு, வெறுப்புகள், ஆசைகள் எல்லாவற்றையும் அவரால் மிக எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.
ஆணை விட பெண் வயதில் மூத்தவராக இருப்பதால் தாம்பத்தியம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பெண்கள் மிகவும் பக்குவமாக நடந்து கொள்வார்கள். உடல் அளவிலும் மன அளவிலும் உறுதியானவராக இருப்பார்கள்.
தாம்பத்திய உறவில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்படும் போது அதை அனுசரித்து, புரிதலுடன் நடந்து கொள்வார். உறவில் ஏற்படும் சிக்கலைப் புரிந்து கொண்டு அதை தீர்க்க முயற்சி செய்வார்.
தன்னை விட இளம் வயது கணவரிடம் மூத்த பெண்கள் கொஞ்சம் கனிவாகவே நடந்து கொள்கிறார்கள். அதனால் இளம் வயது கணவர்கள் செய்யும் சின்ன சின்ன தவறுகள் மன்னிக்கப்படுகிறது. அதை திருத்திக் கொள்வதற்கான வய்ப்பையும் அதற்கான உதவியையும் அவர்கள் செய்கிறார்கள்.
தன்னை விட வயதில் மூத்த பெண்களைத் திருமணம் செய்யும் ஆண்கள் வீட்டில் எப்போதும் சிறு குழந்தையாகவே மனைவியால் பார்க்கப்படுவதால் வெளியிலும் தன்னை மிக இளமையானவர்களாக காட்டிக் கொள்கிறார்கள்.
தங்களை மிகவும் இளமையாகக் காட்டிக் கொள்ள நினைக்கும் ஆண்கள் தன்னை விட மூத்த பெண்களையே திருமணம் செய்து கொள்ள நினைக்கிறார்கள்.