Breaking News :

Sunday, February 23
.

ஆப்பிள் விதை ஆபத்தானதா?


ஆப்பிள்கள் எல்லாருக்கும் பிடித்த ஒரு பிரபலமான பழமாகும். இதில் ஏராளமான ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. அமெரிக்க கலாச்சாரம் மற்றும் வரலாற்றில் ஆப்பிள்கள் தான் அதிகமாக பயிரிடப்படும் பழமாக உள்ளது. இதன் ஸ்பெஷல் என்னவென்றால் சுவைகளுக்கு ஏற்ப இவற்றின் மரபணுக்களை மாற்றியும் நம்மால் பயிரிட முடியும். இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்கள் தன்மை புற்றுநோய் போன்ற நோய்களை எதிர்த்தும் போரிடுகிறது. அதனால் தான் ஒரு நாளைக்கு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் நாம் டாக்டரையே பார்க்க வேண்டாம் என்கிறார்கள்.

ஆனால் ஆப்பிள் பழத்தின் நடுப்பகுதியில் கறுப்பு நிற விதைகள் இருக்கும். இது பழத்தில் இனிமை இல்லாத பகுதி. நீங்கள் இதை சிறிய கறுப்பு விதைகள் என்று நினைத்தால் அது தான் ஆபத்துக்குரியதும் கூட. ஆமாங்க இந்த கறுப்பு விதைகளை நீங்கள் உட்கொள்ளும்போது அது நமது சீரண நொதிகளுடன் தொடர்பு கொண்டு சயனைடு ஆன அமிக்டாலின் என்ற நச்சை வெளியிடுகிறது. நீங்கள் தற்செயலாக சில விதைகளை சாப்பிட்டால் கூட நச்சுக்கள் உங்களை ஆட்கொள்ளக் கூடும்.

​இந்த சயனைடு எவ்வாறு செயல்படுகிறது?

சயனைடு என்பது ஒரு நச்சுக் கெமிக்கலாகும். இது ஒரு கொடிய விஷமாக செயல்படுகிறது. இந்த கெமிக்கலை தீவிரவாதிகள், இரசாயன போர்க்கருவிகளாக பயன்படுத்துகின்றனர். பெரும்பாலும் தற்கொலைகளில் பயன்படுகிறது. சயனைடைக் கொண்ட பல சேர்மங்கள்-சயனோகிளைகோசைடுகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த சயனோகிளைகோசைடுகள் இயற்கையிலயே ஆப்பிள் விதைகளில் காணப்படுகிறது. இவற்றில் அமிக்டாலின் ஒன்றாகும்.

ஆப்பிள் விதைகள் நமது சீரண நொதிகளை எதிர்க்கும் ஆற்றலை கொண்டுள்ளன. இதற்கு வெளியே வலுவான அடுக்கு உள்ளது. ஆனால் விதைகளை நீங்கள் மென்று சாப்பிடும் போது அமிக்டாலின் உடலில் வெளியாகி சயனைடை உற்பத்தி செய்ய இயலும். உங்கள் உடலில் உள்ள நொதிகளால் சிறிய அளவு நச்சுத்தன்மையை வயிற்றில் ஏற்படுத்தும். இருப்பினும், அதிகமாகும் போது பெரிய அளவு ஆபத்தைக் கூட ஏற்படுத்தலாம்.

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (சி.டி.சி) நம்பகமான ஆதாரத்தின் படி, 1-2 மி.கி / கி.கி என்பது 154 பவுண்டு (70 கிலோகிராம்) எடையுள்ள ஒரு மனிதனுக்கு இந்த அளவு சயனைடு ஆபத்தில் முடியும். பெரும்பாலான ஆப்பிள்களில் 5 விதைகள் வரை இருக்கும். இருப்பினும் இதன் எண்ணிக்கை தாவரத்தை பொருத்து மாறுபடலாம். ஒரு அபாயகரமான சயனைடு அளவைப் பெற நீங்கள் சுமார் 200 ஆப்பிள் விதைகளை அல்லது சுமார் 40 ஆப்பிள்களின் மையப்பகுதியை நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.

சிறிய அளவிலான சயனைடு கூட வெளிப்படுவது ஆபத்தானது என்று நச்சு பொருட்கள் மற்றும் நோய் பதிவேட்டில் (ஏ.டி.எஸ்.டி.ஆர்) நிறுவனம் கூறுகிறது. சயனைடு இதயத்திற்கும் மூளைக்கும் தீங்கு விளைவிக்கும், மேலும் கோமா மற்றும் மரணத்திற்கு கூட வழிவகுக்கும். மக்கள் ஆப்பிளின் விதைகளையும், கீழ்க்கண்ட பழங்களின் விதைப்பகுதிகளையும் தவிர்க்க வேண்டும் என்று ஏ.டி.எஸ்.டி.ஆர்) நிறுவனம் கூறுகிறது.

​அறிகுறிகள்:
மூச்சுத்திணறல்
வலிப்பு தாக்கம்
சுயநினைவு இழப்பு போன்றவற்றிற்கு வழிவகுக்கும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.