Breaking News :

Wednesday, February 05
.

வெறும் வயிற்றில் அருகம்புல் ஜூஸ் குடித்தால்?


அருகம்புல் எவ்வளவு காலம் மழை இல்லாவிட்டாலும் காய்ந்து போய் காணப்படுமே தவிர அழிந்து போகாது. சிறிது மழை பெய்தால்கூட உடனே துளிர்விடும். அதுபோல் எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் சோர்ந்து போகாமல் நம்பிக்கையோடு இருக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் அருகம்புல்லை உதாரணமாகச் சொல்லி வாழ்ந்ததைப் பார்க்கும்போதே அதன் மகத்துவம் நமக்குத் தெரியவரும்.

* அருகம்புல்லின் கணுக்களை நீக்கிவிட்டு 10 கிராம் அளவு எடுத்து, அதனுடன் வெண்மிளகு 10 சேர்த்து 4 டம்ளர் நீர்விட்டு காய்ச்சி, பாதியாக வற்றியதும், அதில் சிறிதளவு பசு வெண்ணெய் சேர்த்து குடித்துவர, மருந்துகளை உட்கொள்வதால் ஏற்படும் வெப்பம், நீர் கடுப்பு, மூலக்கடுப்பு, வெள்ளைப்படுதல் போன்றவைக் குணமாகும்.

*  தீராத வயிற்றுவலிக்கு அருகம்புல்லுடன் வேப்பிலையை சமஅளவு எடுத்து நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி 100 மில்லி அளவு குடித்துவர குணமாகும்.

* அருகம்புல்லுடன் மாதுளை இலையை சேர்த்து கஷாயமாக்கி காலை, மாலை இரண்டு வேளையும் 100 மில்லி அளவு குடித்துவர பெண்களுக்கு மாதவிலக்கின்போது ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கு கட்டுப்படும்.

*  வெட்டுக்காயம் ஏற்பட்டால் உடனே அருகம்புல்லுடன் அரிவாள் மூக்கு பச்சிலையை சேர்த்து அரைத்து வைத்துக்கட்ட ரத்தம் வடிவது உடனே நிற்பதுடன், காயமும் வெகுவிரைவில் ஆறிவிடும்.

அருகம்புல்லுடன் மஞ்சளும், சுண்ணாம்பும் சேர்த்து அரைத்து நகச்சுற்று உள்ள இடத்தில் பூசிவர வலியும், வீக்கமும் குறையும்.

*  ஒரு பிடி அருகம்புல், மிளகு-10, சீரகம் சிறிதளவு சேர்த்து அரைத்து பாலில் கலந்து குடிக்க, உடலில் சேர்ந்துள்ள மருந்துகளின் நஞ்சினை அது போக்கிவிடும். அருகம்புல் வேர், ஆவாரம்பூ  இவை இரண்டையும் நிழலில் உலர்த்தி இடித்து சலித்து பொடியாக்கி கொள்ளவும். இதில் 2 கிராம் அளவு எடுத்து, அதை நெய்யுடன் கலந்து சாப்பிட மூல நோய் குணமாகும்.

* அருகம்புல் வேரையும், அகத்தி வேரையும் இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து, காலையில் அதனை காய்ச்சி வடிகட்டி குடித்துவர நீர் எரிச்சல், ஆண் குறி எரிச்சல் குணமாகும்.

* அருகம்புல் 2 பங்கு, கீழாநெல்லி ஒரு பங்கு சேர்த்து அரைத்து, அதை தயிரில் கலந்து குடிக்க சிறுநீர் எரிச்சல், சிறுநீருடன் ரத்தம் கலந்து வெளியாகுதல், உடல் வறட்சி போன்றவை குணமாகும். உடல் வெப்பம் தணியும். அருகம்புல்லை ஒரு கைப்பிடி அளவு எடுத்து நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி, அதனுடன் பால், சர்க்கரை சேர்த்து குடித்துவர சிறுநீர் சம்பந்தமான நோய்கள் நீங்கிவிடும். சிறுநீர்ப்பை பலப்படும்.

* அருகம்புல்லுடன் வெண்தாமரை பூவிதழ்களை சேர்த்து கஷாயமாக்கி தினமும் இருவேளை குடித்துவர இதய பலவீனம் நீங்கி, இதயமும், ரத்தக் குழாய்களும் உறுதிபெறும்.

* அருகம்புல் வேரை நிழலில் உலர்த்தி பொடியாக்கி நல்லெண்ணெயில் கலந்து காய்ச்சிக் கொள்ளவும். இதனை உடலில் தேய்த்து குளித்துவர எல்லாவித தோல் நோய்களும் குணமாகும். அதை, தலையில் தேய்த்து குளிக்க பொடுகுத்தொல்லை நீங்கும். உடல் குளிர்ச்சியாகும்.

 * அருகம்புல் சாற்றுடன் சிறிதளவு பன்னீர், பப்பாளிப் பழம் சேர்த்து பிசைந்து முகத்தில் தடவி, உலர்ந்தவுடன் கழுவிவர வெயிலால் ஏற்பட்ட கருமை அகன்று முகம் பளபளப்பாகும். அருகம்புல்லை நீர்விட்டு அரைத்து வடிகட்டி, அதனுடன் வெல்லம் தேவையான அளவு சேர்த்து பருகிவர சிறு நீரக நோய்கள் குணமாகுவதுடன், உடலும், முகமும் அழகு பெறும்.

*  நரம்பு தளர்ச்சியும், உடல் தளர்ச்சியும் நீங்கும். மலச்சிக்கல், தூக்கமின்மை குணமாகும். வயிற்றின் அமிலத் தன்மை குறையும். உடலில் தேங்கியுள்ள கழிவுகள், விஷத்தன்மை வெளியேறும். நீரிழிவு, தொழுநோய், கரப்பான், சொறி, சிரங்கு ஆகியவை குணமாகும்.

 * பல் சம்பந்தப்பட்ட நோய்கள், பல் ஈறில் இருந்து ரத்தம் கசிந்து, வாய் நாற்றம் போன்றவை விலகும். உடலுக்கு அழகும், வசீகரமும் தரும்.

உடல் வெப்பம் தணியும். இந்த பலன்களை நீங்களும் பெறவேண்டுமா? தினமும் டீ, காபிக்கு பதிலாக அருகம்புல் சாற்றுடன் தண்ணீர் அல்லது தேன் அல்லது இளநீர் கலந்து சாப்பிடுங்கள். ஒரே ஒரு “நிபந்தனை” தினமும் காலையில் வெறும் வயிற்றில் தான் இதை குடிக்க வேண்டும். அப்போது தான் பலன் உண்டு.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.