நொச்சி இலை இரண்டு
மிளகு ஐந்து
லவங்கப்பூ இரண்டு
பூண்டுப் பல் ஒன்று
இவை அனைத்தையும் வாயிலிட்டு நன்றாக மென்று இதன் சாற்றை விழுங்கி வந்தால் தீராத நாள்பட்ட எத்தனையோ நாட்களாக அல்லது வருடங்களாக தொல்லை கொடுத்து வந்த ஆஸ்த்துமா நோயானது வெகு எளிதாக முப்பது நாட்களில் முழுமையாக குணமாகும்
மேலும் மூச்சு திணறல் மூக்கடைப்பு மூச்சு இழுப்பு போன்ற சுவாச தொந்தரவுகள் அனைத்தும் ஒரு வார காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து முழுமையாக குணமாகி விடும்
வலிகள் நீங்க
இரண்டு கைப்பிடி நொச்சி இலையை விளக்கெண்ணையில் வதக்கி வலி உள்ள இடங்களில் ஒத்தடம் கொடுத்து வந்தால் வலிகள் அனைத்தும் குணமாகும்
குறிப்பாக
மூட்டுவலி இடுப்பு வலி மூட்டு வீக்கம் தோள்பட்டை வலி போன்ற நாள்பட்ட வலிகளுக்கு இந்த ஒத்தட முறையானது நல்ல வலிகளை நீக்கும் ஒரு நிரந்தர தீர்வாக அமையும்
வாத வலிகள் நீங்க
ஒரு கைப்பிடி நொச்சி இலை ஒரு கைப்பிடி வேலிப்பருத்தி இலை இவை இரண்டையும் ஒரு மண்பானையிலிட்டு விளக்கெண்ணெய் ஊற்றி வதக்கி பொறுத்துக் கொள்ளும் அளவிற்கு மிதமான சூட்டில் ஒத்தடம் கொடுத்து வந்தால் வாத நோய்களின் வலிகள் முழுமையாக குணமாகிவிடும்
தொடர்ந்து இந்த ஒத்தட முறையை பயன்படுத்தி வந்தால் முடக்கு வாதத்தால் முடங்கிக் கிடப்பவரும் படிப்படியாக எழுந்து நடக்கும் அளவிற்கு ஒரு முன்னேற்றத்தை இந்த ஒத்தடம் தரும்
முடக்குவாதம் நீங்க
நொச்சி இலை வைத்தியம்
மிளகுத் தூள் இரண்டு கிராம் எடுத்து இதை நெய்யில் குழைத்து இந்த கலவையோடு பத்து மில்லிநொச்சி இலை சாற்றை கலந்து காலை மாலை இருவேளையும் பதினைந்துநாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் படுத்த படுக்கையாக கிடக்கும் வாத நோயாளிகள் எழுந்து நடக்கும் அளவிற்கு முன்னேற்றம் ஏற்படும்
முடக்குவாத நோய்கள்
அனைத்தும் நீங்க
நொச்சி இலைச்சாறு கரிசலாங்கண்ணி இலை சாறு துளசி இலை சாறு வகைக்கு பத்து மில்லி எடுத்து இதில் ஒரு ஸ்பூன் ஓமபொடியை கலந்து காலை மாலை இரண்டு வேளையும் நாற்பதுநாட்கள் உப்பு புளி காரம் நீக்கி பத்தியம் முறையில் இந்த வைத்திய முறையை கடைபிடித்து வந்தால் வாத நோய்கள் அனைத்தும் குணமாகும்