சர்ப்பகந்தி பலநரம்பு வியாதிகளும், புற்று நோய், மலேரியா, மனஅழுத்தம், ஹைப்பர் டென்சன், இரத்த ஓட்டம் சீர்படுத்த, மாரடைப்பு இவைகளைக் குணப்படுத்த முடியும். இரத்த அழுத்தம், திக்குவாய், மூளைகோளாறு, பிரசவக் கோளாறு போன்றவற்றினை சர்ப்பகந்தி தீர்க்க உதவுகிறது.
இலைகளின் சாறு கண்விழி படலத்தின் ஒளிபுகா தன்மையினை போக்க வல்லது. வேரின் கசாயம் பெண்களின் மகபேறு காலத்தில் கர்ப்பப்பையினை சுருங்கி விரியச் செய்யும் தன்மை கொண்டது. குடல் கோளாறுகள் காய்ச்சல் ஆகியவற்றினை போக்கக் கூடியது.
வேரின் ஆல்கலாய்டு சாறு தளர்நெஞ்சுப்பை துடிப்பு, உயர் ரத்த அழுத்தம், தூக்கம் ஆகியவற்றுடன் மன உளைச்சலைத் தணிக்கும் திறன் கொண்டது. மனவாட்ட நோய், மனநோய், நரம்பு தொடர்பான நோய்கள், முரண் மூளைநோய் ஆகியவற்றினை குணப்படுத்த பயன்படுகிறது.
சர்பகந்தா செடியின் வேரை உலர்த்தி பொடி செய்து ஒரு கிராம் அளவு எடுத்து சம அளவு நெல்லிக்காய் பொடி, கடுக்காய் பொடி மற்றும் தான்றிக்காய் பொடி ஆகியவற்றை நன்றாக கலந்து காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் உயர் இரத்த அழுத்தம் குறையும்.
நரம்பு தளர்ச்சி குறைய சமஅளவு சர்பகந்தா செடியின் வேர்பொடி மற்றும் ஜடமாஞ்சி வேர் பொடி இரண்டையும் சேர்த்து நன்றாக அரைத்து சாப்பிட்டு வர குணமாகும்.