Breaking News :

Friday, May 02
.

சக்கரை வியாதியை கட்டுப்படுத்த இந்த ஒரு காய் போதும்?


பேரிக்காய் நம் உடலின் கழிவுகளை நீக்கி சுத்தம் செய்யும் ஆற்றல் கொண்டது. சிறுநீரகக் குறைபாடு உள்ளவர்களுக்கு இது மிகச்சிறந்த கனி. சிறுநீரை வெளியேற்றவும், பலவீனமான சிறுநீரகச் செயல்பாட்டைச் சரிசெய்யவும், உடலின் அதிகப்படியான நீரை வெளியேற்றி சுத்தப்படுத்தவும் உதவுகிறது.

இதய படபடப்பு மற்றும் இதயம் பலவீனமானவர்கள் தினம் ஒரு பேரிக்காய் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். உடல் சூட்டை குறைக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. மேலும் சிறுநீரகத்தில் ஏற்படும் கற்களையும் சரி செய்யும் தன்மை இதற்கு உண்டு.

பேரிக்காய் தோலின் துவர்ப்புத் தன்மைதான் இதன் பலமே! பேரிக்காயைத் தோலுடன் சாப்பிடும்போது அது இதயநோயை கட்டுப்படுத்துகிறது. இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், டைப் 2 சர்க்கரை நோய்க்கான வாய்ப்பை குறைக்கிறது. இதிலுள்ள ஃபிளவனாய்ட்ஸ் மற்றும் ரசாயணங்கள் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது. மேலும், மலச்சிக்கல் தொடர்பான நோய்களுக்கும், குடல் புண்ணுக்கும் இது சிறந்த நிவாரணியாகும்.

கர்ப்பிணி பெண்கள் இதை சாப்பிட்டால் கருவில் உள்ள குழந்தை நல்ல வளர்ச்சி பெற உதவியாக இருக்கும். மேலும் குழந்தைபேறுக்கு பின்னர் தாய்ப்பால் சுரப்பதற்கு காலை மற்றும் மாலையில் பேரிக்காய் சாப்பிட்டால் அப்பிரச்சனை சரியாகும்.

பேரிக்காய் உடல் எடையைக் குறைக்கும் ஆற்றலும் இதற்கு உள்ளது. உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைத்து உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவுகிறது.

வளரும் குழந்தைகளுக்கு கால்சியம், இரும்புச் சத்துக்கள் அவசியம் தேவை. இந்த சத்துக்கள் பேரிக்காயில் நிறைந்துள்ளன.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.