Breaking News :

Sunday, February 23
.

கொலஸ்டிராலைக் குறைக்கும் கருப்பு உலர் திராட்சை?


உலர் கருப்பு திராட்சை செரிமானக் கோளாறுகளான வாயு, நெஞ்செரிச்சல், வயிற்றுப் புண் ஆகியவற்றை சரி செய்கிறது.பலருக்கும் ரெய்சின்ஸ் எனப்படும் பிரவுன் நிறத்தில் இருக்கும் உலர் திராட்சை பற்றி தெரியும். அதுவே, கருப்பு நிறத்தில் கிடைக்கும் உலர் திராட்சையில் உள்ள நன்மைகள் பற்றி தெரியுமா? ரத்த சோகை, செரிமான கோளாறு, ரத்தத்தில் நச்சு, கொலஸ்டிரால் உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு கருப்பு உலர் திராட்சை தீர்வாக அமைகிறது.செரிமானத்தை எளிதாக்குகிறது : பொதுவாகவே, பழங்களில் நார்ச்சத்து அதிகமாக இருக்கும்.

அதிலும், உலர் கருப்பு திராட்சையில் அதிக நார்ச்சத்து உள்ளது. தினசரி இதனை உண்பது, உடலுக்குத் தேவையான நார்ச்சத்தை வழங்கி, மலச்சிக்கல் ஏற்படுவதை தடுக்கிறது. அது மட்டுமின்றி, செரிமானத்தையும் எளிதாக்குகிறது.தினசரி இந்த உலர் பழத்தை சாப்பிடுவதால், குடலில் நல்ல பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். செரிமானக் கோளாறுகளான வாயு, நெஞ்செரிச்சல், வயிற்றுப் புண் ஆகியவற்றை சரி செய்கிறது.

மேலும், திராட்சையில் உள்ள அமிலம் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளதால், பெருங்குடல் அழற்சி, புற்று, தொற்று உள்ளிட்ட அபாயத்தை குறைக்கும்.எலும்புருக்கி நோயில் இருந்து பாதுகாப்பு வழங்குகிறது ஒரு சில பழங்களில் எலும்புகளுக்குத் தேவையான கால்சியம், பொட்டாசியம் ஆகிய கனிமங்கள் இருக்கும்.

வயதாகும் போது ஏற்படும் எலும்புத் தேய்மானம் மற்றும் எலும்புகளில் துளைகள் ஏற்படுவது ஆகியவற்றைத் தடுக்க, தினசரி கருப்பு உலர் திராட்சையை சாப்பிட்டு வரலாம்.உடலில் ஊட்டச்சத்து கிரகிப்பை அதிகப்படுத்தி, நோயெதிர்ப்பு சக்தியை பலமாக்குகிறது: கருப்பு திராட்சை என்பது, கருப்பு உலர் திராட்சையைக் குறிக்கிறது.

இதில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் பிரவுன் நிற உலர் திராட்சையை விட, அதிக இரும்பு சத்து இருக்கிறது. அதே நேரத்தில், வைட்டமின் சி சத்தும் நிறைந்துள்ளது. இதனால், உடலில் சத்து கிரகிக்கும் தன்மை அதிகரிக்கிறது. அது மட்டுமின்றி, உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்துக்குத் தேவையான வைட்டமின் சி, உடலை பலப்படுத்துகிறது.

இது தவிர கண் மற்றும் சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் உலர் கருப்பு திராட்சைகள் உதவுகின்றன.இரத்த சோகையை தடுத்து, ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது கருப்பு திராட்சையில் நிறைந்துள்ள இரும்பு சத்து ரத்த சோகையை தடுக்க உதவுகிறது.

மேலும் கருப்பு திராட்சையில் இருக்கும் காப்பர், உடலின் பல்வேறு பாகங்களுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச் செல்ல தேவையான சில வைட்டமின்களும் உள்ளன. இதனால், ரத்த சோகை தடுக்கப்படுவதோடு, ரத்த ஓட்டமும் அதிகரிக்கும்.கொலஸ்டிராலை குறைத்து இதய நோய் அபாயத்தை தவிர்க்கலாம்: கருப்பு திராட்சையை தொடர்ந்து சாப்பிடுவது, ரத்த அழுத்த அளவை சீராக வைக்கிறது. குறிப்பாக, LDL கொலஸ்டிரால் எனப்படும் கெட்ட கொலஸ்டிராலைக் குறைக்கிறது. இதன் மூலம் இதயத்துக்கு அழுத்தம் ஏற்படுத்தாமல், இதய நோய்கள் ஏற்படும் அபாயம் குறைகிறது.

 தினமும் சிறிதளவு கருப்பு திராட்சை சாப்பிட்டு வந்தால், இதய நோய் அபயாத்தைக் குறைக்கலாம். மேலும் இதில் நிறைந்துள்ள பொட்டாசியம் பக்கவாதம் ஏற்படுவதை தவிர்க்கவும் உதவும்.புற்றுநோய் பாதிப்பைக் குறைக்கிறது/கருப்பு திராட்சை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும் ஆற்றல் கொண்டது.

மேலும் புற்றுநோய் மற்றும் கட்டி வளர்ச்சிக்கு காரணமாக இருக்கும் ஆக்ஸிஜனேற்ற சேதங்கள் மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்களில் இருந்து கருப்பு திராட்சை பாதுகாக்கலாம். வாயுத் தொந்தரவு ஏற்படாமல் இருக்க, கருப்பு நிற உலர் திராட்சையை தண்ணீரில் ஊறவைத்த பின்பே சாப்பிட வேண்டும்..

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.