இந்த வெயில் காலம் வந்துட்டாலே உடம்பில் உள்ள நீர்ச்சத்துக்கள் எல்லாம் வெளியேறிவிடும். இப்படி நீர்ச்சத்து குறைவதால் ஏராளமான உடல் உபாதைகளும் நமக்கு ஏற்படுகிறது. எனவே அவ்வப்போது போதுமான தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். இப்படி நீர்ச்சத்து பற்றாக்குறையை எப்படி தவிர்ப்பது அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
நமது உடலில் மூன்றில் இரண்டு பங்கு நீரால் தான் ஆனது. ஏனெனில் நமது உடலின் நிறைய செயல்பாட்டுக்கு நீர் மிகவும் அவசியம். கண்களுக்கு, மூட்டுகளுக்கு நீர் ஒரு லூப்ரிகண்ட் ஆக செயல்படுகிறது. தோலிலிருந்து வெளிவரும் வியர்வை மூலமாக உடம்பில் உள்ள நச்சுக்கள் வெளியேறி உடம்பை சுத்தப்படுத்துகிறது. நமது உடலில் இருக்கும் நீர்ச்சத்து மூலம் தான் உப்பு, குளுக்கோஸ், மினரல்கள் போன்றவற்றை சமநிலையில் வைக்க முடியும்.
போதுமான நீர்ச்சத்தை எடுத்துக் கொள்ளாத போது அதிகப்படியான தண்ணீர் உடலிருந்து வெளியேறும் போது இந்த நிலை ஏற்படுகிறது. தீவிரமாக உடல் செயல்பாடுகள், வியர்த்தல் போன்றவை நீர்ச்சத்து பற்றாக்குறையை ஏற்படுத்த கூடும். எனவே இந்த மாதிரியான சமயங்களில் போதுமான அளவு நீர் எடுத்துக் கொள்வது நல்லது.
வயிற்று போக்கு நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்பட முக்கிய காரணமாக அமைகிறது. காரணம் இது உணவில் உள்ள தண்ணீரை உறிஞ்சி கொள்கிறது.
வாந்தி, உணவு நோய்கள், குமட்டல் மற்றும் ஆல்கஹால் நச்சு போன்றவையும் நீர்ச்சத்து பற்றாக்குறைக்கு காரணமாகிறது.
காய்ச்சல், உடற்பயிற்சி செய்யும் போது ஏற்படும் அதிகப்படியான வியர்த்தலால் நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. அதே மாதிரி வெயில் காலங்களிலும் வியர்வை அதிகமாக இருக்கும்.
இரத்த சர்க்கரை அளவு அதிகரித்தல் அடிக்கடி சிறுநீர் கழிப்பு ஏற்பட்டு உடம்பில் நீர்ச்சத்து பற்றாக்குறையை ஏற்படுத்துகிறது.
ஆல்கஹால் அதிகமாக எடுப்பது, ஆன்டி ஹிஸ்டமைன், இரத்த அழுத்தம் மற்றும் ஆன்டிசைக்கோட்டிஸ் போன்ற மருந்துகளும் அடிக்கடி சிறுநீர் கழிப்பை ஏற்படுத்தி உடம்பில் நீர்ச்சத்து பற்றாக்குறையை ஏற்படுத்துகிறது.
நீர்ச்சத்து பற்றாக்குறையை கண்டுக்காமல் விட்டால் உங்கள் உயிருக்கே ஆபத்தாகி விடும். உடனே உங்கள் உடம்புக்கு தேவையான நீரை எடுத்துக் கொள்வது நல்லது.
நீங்கள் உடற்பயிற்சி செய்யும் போது கூட ஒரு பாட்டில் தண்ணீரை அவ்வப்போது குடியுங்கள்.
இதன் மூலம் நீர்ச்சத்து பற்றாக்குறையை போக்கி விடலாம். அதே மாதிரி சிறுநீரின் நிறத்தையும் கவனியுங்கள். லேசான மஞ்சள் நிறமோ அல்லது அடர்ந்த மஞ்சள் நிறமோ தென்பட்டால் நிறைய தண்ணீர் குடியுங்கள். இது உங்கள் உடம்பில் நீர்ச்சத்து பற்றாக்குறையை காட்டுகிறது.
நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்பட்டு இருப்பதை சில அறிகுறிகள் கொண்டு நீங்கள் அறிந்து கொள்ளலாம். உங்களுக்கு தாகம் எடுக்கும். எனவே தாகம் எடுக்கும் போது நிறைய தண்ணீர் குடியுங்கள்.
ஒரு ஆரோக்கியமான மனிதன் ஒரு நாளைக்கு 7-8 தடவை சிறுநீர் கழிப்பார். எனவே நீங்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்காவிட்டால் உங்கள் உடம்பில் போதுமான ஊட்டச்சத்து இல்லாததை அறிந்து கொள்ளுங்கள்.
அதே மாதிரி தாகம் எடுக்கும் போது நீர் குடிப்பது மட்டுமே நல்லது. அதற்கு பதிலாக செயற்கை குளிர்பானங்களை எடுத்தால் எதிர்மறை விளைவுகளை சந்திக்க நேரிடும்.