Breaking News :

Sunday, February 23
.

ஞாபக மறதியை அதிகமாக்கும் உணவுகள்?


ஞாபக சக்தியை அதிகரிக்க கூடிய ஆற்றல் வாய்ந்த உணவுகளை ஒருவர் தன்னுடைய உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஞாபக மறதியால் தூக்கமின்மை மற்றும் மனஅழுத்தமும் ஏற்படும். ஞாபக மறதியை ஏற்படுத்தும் உணவுகளின் பட்டியல் இங்கே தரப்பட்டுள்ளது. அவை என்னென்ன என்று தெரிந்து கொண்டு அதற்கேற்றபடி உங்களுடைய உணவுப் பழக்கத்தில் அவற்றின் அளவை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

மனிதனுடைய ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்விற்கும் உடல் இயக்கத்தை போலவே உணவும் மிகவும் முக்கியமானதாகும். நமது மூளைக்கு சுறுசுறுப்பாகவும் கூர்மையாகவும் செயல்பட ஊட்டச்சத்துக்கள் தேவை. இருந்தாலும் மோசமான உணவு பழக்கவழக்கங்கள் உங்கள் மூளையை மிக மோசமாக பாதிக்கும். சில வகை உணவுகளை சாப்பிடுவதால் அல்சைமர் நோய் கூட ஏற்படும். உங்கள் தினசரி உணவு பட்டியலில் சில ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்ப்பதன் மூலம் ஞாபக மறதி ஏற்படும் அபாயத்தை குறைக்கலாம். ஞாபக மறதியை ஏற்படுத்தக்கூடிய சில உணவுகளின் பட்டியல் இங்கே தரப்பட்டுள்ளது. அதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

ட்யூனா மீன்:
ட்யூனா எனப்படும் சூரை மீன் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு பயனளிக்கக் கூடியது. ஆனால் மிதமான அளவில் மட்டுமே சாப்பிட வேண்டும். வாரத்தில் இருமுறை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அளவுக்கதிகமாக சாப்பிடும்போது இதில் அதிக அளவு பாதரசம் அடங்கியிருப்பதால் மூளையின் செயல்பாட்டை அழிக்கிறது. ஏனென்றால் பாதரசத்திற்கு மூளையை செயல் இழக்கச் செய்யும் ஆற்றல் உண்டு. ட்யூனா மீனுக்கு பதிலாக சாலமன் மீனை எடுத்துக் கொண்டால் எந்த தீங்கும் விளைவிக்காது அதற்கு பதிலாக நினைவாற்றலை அதிகரிக்கும்.

சோயா:
சோயாவை டோஃபூ அல்லது சோயா சாஸ் என எந்த வடிவில் எடுத்துக்கொண்டாலும் நன்மைக்கு பதிலாக அதிக தீமையே கிடைக்கிறது. சோயாவில் இருக்கும் அதிக அளவு உப்பு மற்றும் சோடியம் விகிதங்கள் மூளைக்கு அதிக தீங்கு விளைவிக்கக் கூடியதாகும். இது உயர் ரத்த அழுத்தத்திற்கு வழிவகுத்து மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை தடை செய்வதோடு நிறுவன செயல்திறன்களில் சிக்கல்களை ஏற்படுத்தி நினைவை இழக்கச் செய்யும்.

மதுபானம்:
ஆல்கஹால் அருந்துவது உங்கள் மூளையில் நீண்ட காலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். மிதமாக குடிப்பது கூட மூளை செல்களை வலுவிழக்கச் செய்து நினைவிழப்பை ஏற்படுத்தும். நீங்கள் மது குடிப்பதை தவிர்க்க வேண்டியதற்கான மற்றொரு காரணம் ஆல்கஹாலை நிறுத்துவதே ஆரோக்கிய வாழ்வை நோக்கி நாம் முன்னெடுத்து வைக்கும் மற்றொரு படியாகும்.

ஆரஞ்சு ஜூஸ்:
ஆரஞ்சு ஜூஸில் நியர் சர்க்கரை அளவு செறிந்துள்ளதால் இதை அதிகமாக அருந்துவது பல்வேறு காரணங்களுக்காக ஆரோக்கியமானது அல்ல. அளவுக்கு அதிகமான சர்க்கரை அறிவாற்றலில் செயல்திறனை இழக்கச் செய்யும். இது உங்களை மோசமான முடிவுகள் எடுக்க செய்யலாம் அல்லது உங்கள் பகுத்தறிவு திறனை அழித்து ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் வேலை செய்யும் திறனையும் அழிக்கும்.

வெள்ளை அரிசி:
வெள்ளை அரிசியில் முற்றிலும் அதிகளவு கார்போஹைட்ரேட்டுகள் இருப்பதால் அரிசி உணவை அதிகமாக உட்கொள்ளும் போது மூளையின் செயல்பாட்டில் பிரச்சினைகளை உண்டாக்கும். மனஅழுத்தத்தில் கொண்டு போய்விடும் அபாயங்களையும் அதிகரிக்கும். அரிசியைவிட உங்கள் ஆரோக்கியத்திற்கு சிறந்ததான மற்றும் சுவையான கோதுமை உணவுகளுக்கு நீங்கள் மாறிக்கொள்ளலாம்.

இந்த உணவுகளை அதிகமாக சாப்பிடுவதை தவிர்த்து மனஅழுத்தம் அல்லது அல்சைமர் நோய் ஏற்படும் அபாயத்தை குறைத்து உங்கள் நினைவாற்றல் திறனை அதிகரித்துக் கொள்ளுங்கள்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.