1. தயிரை விடச் சிறந்தது மோர். எளிதில் ஜீரணமாகக் கூடியது.
2. உடல் எடையைக் குறைக்கவல்லது, உணவு உண்ட பின் ,அறைமணி நேரம் கழித்து ஒரு குவளை நீர்மோர் பருகினால் உண்ட உணவுகள் விரைவில் சீரணமாகி உடலைச் சீராக வைக்கும்.
3. பெண்களின் மாதவிலக்குக் காலங்களில் உண்டாகும் போக்கைக் கட்டுப்படுத்தவும் வயிற்றுவலியைக் குறைக்கவும் வெந்தயம் சேர்த்த நீர்மோர் உதவும்.
4.மூல நோய்க்கு மோர் பிரமாதமான மருந்து.
5. வயிற்றுப்போக்கு, அஜீரணக் கோளாறுகளுக்கெல்லாம் மோர் சிறந்த மருந்து.
6. மோர் குடித்தால் உடனே பசி எடுக்கும்.
7. வெயிலால் உடம்பு சூடாகி சிறுநீர் பாதையில் எரிச்சல் உண்டானால் அதற்கும் மருந்து இதுதான்.
8. நீர்க்கடுப்பைப் போக்கும் அருமருந்து, ரத்தசோகைக்கும் மோர் நல்லது!
9. நம்மை அறியாமல் சாப்பிடும் மோசமான உணவுப் பொருட்கள் மூலம் உடலில் சேரும் விஷத்தை அகற்றும் வல்லமைகூட மோருக்கு உண்டு!
10. பால், மோர், பழச்சாறுகள் அளிப்பது குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு நன்மை அளிக்கும்.
11. குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு இரண்டு விதங்கள்: ஒன்று சாதாரணமானது, மற்றது கிருமியால் ஏற்படுவது.
12. வயிற்றுப் போக்கு ஆகும் குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு 4 முறை மோர் கொடுக்கலாம். மோரை அப்படியே அளித்தால் சளி பிடிக்கும் என்று பயப்படும் தாய்மார்கள், சிறிய வாணலியில் தயிரை லேசாக கொதிக்க வைத்து சிறிது மஞ்சள் தூள் கலந்து சாதத்தில் பிசைந்து கொடுத்து வரலாம்.
13.காமாலை நோயைச் சாந்தப்படுத்தும். எந்த விதமான பேதியையும் கட்டுப்படுத்தும்.
14.எளிதில் செய்து விடக் கூடிய மோரைக் குடும்பத்திலுள்ள அனைவரும் பருகிப் பயன் பெற வேண்டும்.
.
அடேங்கப்பா... மோர் சாப்பிட்டா இவ்ளோ நன்மையா?

.