Breaking News :

Sunday, May 04
.

தைராய்டு பிரச்னைக்கு சௌசௌ?


தைராய்டு கோளாரால் அவதிப்படுபவர்கள் சௌசௌவை பயன்படுத்தலாம். சௌசௌவில் காணப்படும் காப்பர், மாங்கனீசு, தைராய்டு நோயால் அவதிபடுபவர்களுக்கு சிறந்த மருந்தாகும். இதை உணவில் எடுத்துக்கொண்டால் தைராய்டு கோளாறு நீங்கும்.

சௌசௌவில் வைட்டமின் ஏ, பி, சி, கே போன்ற சத்துகள் அடங்கியுள்ளன. சௌசௌவில் காணப்படும் வைட்டமின்கள் புற்றுநோய் தடுப்பியாக செயல்படுகிறது என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். எனவே இதை உணவில் பயன்படுத்தினால் புற்றுநோய் வராமல் பாதுகாத்து கொள்ள முடியும்.

பெருங்குடல், சிறுகுடல் சம்பந்தமான பிரச்சனைகளை நீக்கி குடல் மூலம் உருவாகக்கூடிய பிரச்சனைகளை சரிபடுத்துகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப  காலத்தில் கை, கால்களில் வீக்கம் ஏற்படும். ஆதலால் நீர்சத்து மிகுந்த காய்களில் ஒன்றான சௌசௌவை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

கொழுப்புகளை குறைக்கவும் இது பயன்படுகிறது. வயிறு மற்றும் இடுப்பு பகுதியில் சேர்ந்து இருக்கும் அதிகபடியான கொழுப்புகளை கரைக்க சௌசௌவை சூப் செய்து பருகினால் நல்ல பலன் கிடைக்கும்.

சௌசௌவை வேகவைத்து உப்பு, மிளகு, தண்ணீர் சேர்த்து சூப் செய்து காலை, மாலை வேளையில் உணவிற்கு முன் இதை பருகலாம்.

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சௌசௌ காயை சாப்பிடலாம். இது நரம்பு தளர்ச்சியை போக்கி நரம்புகளை கட்டுபடுத்தும் ஆற்றல் கொண்டது. சௌசௌவில்  கால்சியம் சத்துகள் காணப்படுவதால் எலும்புகளை வலுப்பெற செய்கிறது. எனவே வளரும் குழந்தைகளுக்கு சௌசௌ காயை உண்ண கொடுக்கலாம்.

வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளை நீக்கி வயிற்றை சுத்தமாக வைத்துக்கொள்ளும் சக்தி இதற்கு உண்டு. உயர் ரத்த அழுத்தத்தை குறைத்து உடலை  சமநிலையில் வைத்துக்கொள்ளும். மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிபடுபவர்கள் இந்த காயை வாரம் இரு முறை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.

News Hub