பாதங்களில் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு உடல் உறுப்புகளுடன் தொடர்புடையது. பாதங்களை மசாஜ் செய்வதன் மூலம் உடலின் அனைத்து உறுப்புகளும் சீராக இயங்குகின்றன.ஏனெனில் நானும் இவ்வாறு அடிக்கடி தேங்காய் எண்ணெய் கால், பாதங்களில் பூசுவது வழக்கம்.
உடல் முழுவதும் தாங்கும் பாதத்தை பராமரிப்பது ஒட்டுமொத்த உடலையும் பராமரிப்பதற்கு சமம். குறிப்பாக பாதங்களில் தேங்காய் எண்ணெய் தடவுவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கிறது .பாதங்களில் தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வதால் உடல் முழுவதும் புத்துணர்ச்சி பெறுகிறது. உடல் உறுப்புகள் சுறுசுறுப்பாக இயங்குகின்றன. இரவில் நல்ல தூக்கம் வருவதற்கு சிறிதளவு தேங்காய் எண்ணெய் எடுத்து பாதங்களில் தேய்த்து விட்டுக் கொண்டுதான் செல்வேன். நல்ல தூக்கம் வரும் .நன்றாக மசாஜ் செய்தால் நல்ல ஆழ்ந்த தூக்கமும் கிடைக்கும் .
இரவு படுக்கைக்கு படுக்கச் செல்லும் முன் கால்களை சுத்தமாக கழுவி விட்டு, நல்ல துணி எடுத்து துடைத்து விட்டு, தேங்காய் எண்ணெய் கொண்டு நன்றாகப் பூசிக் கொண்டு, சிறிது நேரம் கழித்து தூக்கச் செல்வேன். கால்களின் வழியாக கிருமிகள் உடலுக்குள் நுழையும் என்பதால் தேங்காய் எண்ணெய் இதை தடுக்கிறது.
மேலும் சருமம் பொலிவு பெறவும் உதவி செய்கிறது. அதேபோல் காலையில் குளிக்கச் செல்லுமுன் முகம் ,கை ,கால் எல்லாம் தேங்காய் எண்ணெய் பூசி , சிறிது நேரம் கழித்துச் செல்வது வழக்கம்.இது சிறு வயதிலிருந்தே இருக்கும் பழக்கம்.இதனால் சருமத்தில் இந்த குளிர் காலத்தில் ஏற்படும் அரிப்பு, ஏதேனும் சிராய்ப்புகள் ஏற்பட்டு இருந்தால், அவை தேங்காய் எண்ணெயினால் ஆறுவதற்கும் துணை புரிகிறது..
தேங்காய் எண்ணெயைக் கொண்டு பாத மசாஜ் செய்வது, கால்களின் அடிப்பகுதியில் உள்ள அக்குபிரஷர் புள்ளிகளை செயல்படுத்துகிறது. இது உடல் பதற்றம், மன அழுத்தம் மற்றும் தேவையற்ற பதட்டம் ஆகியவற்றையும் சரிசெய்ய இது உதவுகிறது.