இந்தியாவில் முக்கியமாக தமிழகத்தில் பகலில் உறவை வைத்துக்கொள்ள மறுப்பதற்கு சில காரணங்களை உளவியலர் கூறுகின்றனர்.
பகலெல்லாம் விவசாய வேலை பார்த்துவிட்டு, இரவு ஓய்வு நேரத்தில் உறவு கொண்டனர் நம் முன்னோர்கள். அதனால் இரவு நேரத்தில் தான் உறவு கொள்ள வேண்டும் என பெண்கள் மனதில் பதிந்து போய்விட்டது.
கூச்சமும், வெட்கமும் பெண்களுக்கு அதிகம். வெளிச்சத்தில் கணவருக்கு தன் உடலை வெளிப்படுத்த பெரும்பாலான பெண்கள் கூச்சப்படுகிறார்கள். விளைவு, விளக்கை அணைத்தால்தான் உறவு என்கிற முடிவில் பல பெண்களும் இருக்கிறார்கள்.
பெண்களுக்கு தன் உடல் குறித்த எண்ணங்கள் குழப்பங்கள் ஆண்களைவிட அதிகம். 'தொப்பை இருக்கு', 'மார்பகங்கள் சின்னதா இருக்கு', 'மார்பகம் ஒண்ணவிட ஒண்ணு சின்னதா இருக்கு', 'மார்பு காம்புகளை சுத்தி முடி இருக்கு', 'மார்பு காம்புகள் உள்ளிழுக்கப்பட்டு இருக்கு', 'அக்குள் இடுக்கு தொடை இடுக்கு கறுத்திருக்கு...' இப்படி ஏதோ ஒரு குறைபாடு தனக்கு இருப்பதாக வருத்தப்படும் பெண்கள், வெளிச்சத்தில் உறவுக்கு விரும்புவது இல்லை. 'லைட் ஆஃப் செஞ்சிட்டா நம்ம உடம்புல இருக்கிற குறை கணவருக்குத் தெரியாது. வெளிச்சத்துல செஞ்சா, இது ஏன் இப்படியிருக்குன்னு அவர் கிண்டல் செஞ்சிட்டா' என்கிற பயம் பல பெண்களிடமும் இருக்கிறது. பெண்களின் உடலை பற்றி கணவர் கிண்டலடித்தால் பெண்களால் தாங்க முடியாது.
ஒருசில பெண்கள், குழந்தை பிறப்பதற்கு முன்பு வரை வெளிச்சத்தில் உறவுகொள்ள சம்மதிப்பார்கள். ஆனால், ஒரு குழந்தை பிறந்த பிறகு, 'மார்பகங்கள் தொங்கிப் போச்சு', 'வயித்துல வரி வரியா இருக்கு' என்று, மறுக்கத் தொடங்குவார்கள். ஒரு சிலருக்கு, வெளிச்சத்தில் உறவு கொண்டால் சீக்கிரமே கணவருக்கு நாம் போர் அடித்து விடுவோம் என்கிற எண்ணம் இருக்கும். இப்படியான காரணங்கள் முன்பு இருந்தது. ஆனால் காலத்தின் மாற்றத்தினால் உறவு கொள்ளும் நேரம் எல்லாம் மாறிபோய் பல காலம் ஆகிவிட்டது.
எப்போது எல்லாம் உறவுக்கு மனம் ஏங்குகிறதோ அப்போதெல்லாம் உறவு வைத்து கொள்வது தவறில்லை. தன் உடல் பற்றிய பயமோ, தன் உடல் கணவர் பார்த்து ஆர்வம் போய்விடுமோ என்ற பயத்தை தூக்கி எறியுங்கள். அப்படியான பயம் இருந்தால் கடைசிவரை உறவில் கிடைக்கும் இன்பத்தை நுகராமல் கடமையே என்று இருப்பீர்கள். உறவின் ஆசை இருந்தாலும் பல பெண்கள் கணவரிடம் கூற மாட்டார்கள். கணவரே அழைக்கட்டும் என்று இருப்பார்கள். இதுவும் பிற்போக்கு தனமானது தான். நமக்கு பசித்தால் நாம் கேட்டு உண்பது எப்படி தவறாகும். அதற்காக ஆசைகளை சாகடிப்பது எப்படி சரியாகும்.
அதிலும் உறவில் முக்கியமான தவறை பெண்கள் செய்கின்றனர். தன் கணவரின் வேகமும் கொத்தளிப்பும் அடங்கியதும் பெண்கள் அமைதியாகி விடுகின்றனர். தன் விருப்பங்களையோ, தனக்கு திருப்தியில்லை என்பதையோ, இன்னும் சிறிது நேரம் இருந்தால் நன்றாக இருக்கும் என்பதையோ பெண்கள் வெளிப்படுத்துவதே இல்லை.
சமீபத்தின் புள்ளி விவரபடி இரு பெண்களில் ஒருவர் உச்சகட்டம் என்றால் என்ன என்பதையே அறியாமல் இருக்கின்றனர். 50% பெண்கள் கடமையே என உறவு வைத்துக்கொள்கிறார்களாம்.
ஆணுக்கு உச்சம் எட்டும் நேரம் 5.5 நிமிடங்கள் என்றால் பெண்ணுக்கு 17 நிமிடங்கள் தேவையாக உள்ளது’
பொறுமையாக பெண்மையை கையாள ஆண்களுக்கு தெரிவதில்லை. உடலுறவுக்கு முன் விளையாட்டுகளும் பெண்மையை தயார் படுத்தவும் ஆண்களுக்கு தெரிவதில்லை. எல்லாம் அவசரம் ஆண்களுக்கு. இன்று திருமணம் மீறிய உறவுகளுக்கு, பெண்களின் திருப்தியின்மையும், காதலோடு அவர்களை பார்த்து கொள்ளாத ஆண்களும் தான் காரணம். அக்கம் பக்கம், வேலை செய்யும் இடம் என ஒரு பெண் சாப்பிடுகிறாள் என்றால் அவளுக்கு சரியான உணவை அளிக்காத, அவள் பசியை அறியாத, விதவிதமான உணவை பரிமாறாத ஆண்களின் குற்றம் தான்.
இன்று செக்ஸ் பற்றிய புரிதல்கள் வலைதளம் மற்றும் Social Media மூலம் பெண்கள் அதிகம் தெரிந்து வைத்திருக்கின்றனர். 40% பெண்கள் சுயின்பத்தை அனுபவிப்பதாக புள்ளிவிபரங்கள் சொல்கிறது. செக்ஸ் பற்றிய விழிப்புணர்வு பெண்களுக்கு அதிகரித்திருக்கிறது. இன்னும் படுத்தோமா, எழுந்தோமா என்று ஆண்கள் இருந்தால் " வெள்ளாடு வேலி தாண்டுவதை தடுக்க முடியாது".
பல நாட்கள் வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு ஆசையோடு வந்த கணவரை, அவர் விருப்பத்துக்கு உறவு கொள்ள சம்மதியுங்கள். பகலில் உறவு கொள்வது ஒன்றும் உலகமகா குற்றம் அல்ல.
நீங்களும் உற்சாகமாக தயாராகுங்கள். இன்பத்தை கொடுத்து இன்பத்தை பெறுங்கள்.
நன்றி: கலை