சாதாரணமாக.. மதுவில் இருக்கும் வேதிப்பொருள் எத்தனால் ethanol ஆகும்.. இந்த எத்தனால் ஆல்கஹால் டீஹைட்ரோஜீனேஸ் என்ற.என்சைம்கள் மூலமாக அசிடால்டிஹைட் acetaldehyde ஆக மாற்றம் அடையும்.
தினமும் அசிட்டால்டிஹைட் உருவாவது அதிகமாக இருக்கும் போது.. அது கல்லீரலில் தங்கி விடுகிறது.. பின்னர் அங்கே இருக்கும் லிவர் செல்களை செயலிழக்க செய்யும் வகையில் வேலை செய்யும். alcoholic liver disease எனப்படும்.
பொதுவாக மது அருந்துவது.. தானாக அருந்ததுதல் ஒரு வகைப்படும் . தெரியாமல் மது அருந்தும் பழக்கத்தை ஏற்படுத்தி குற்றச்செயல்கள் நடத்துவது INTOXICATING THE DRINK இன்னோரு வகைப்படும்.
Blood alcohol concentration என்ற சுவாசம் மூலம் கண்டறியப்படும் பரிசோதனை மூலம் எந்த அளவுக்கு மது போதையில் ஒருவர் இருக்கிறார் என்று அறிந்து கொள்ள முடியும். 25 to 80 mg / dl என்பது அதிக போதைத்தன்மையை.குறிக்கும்.
மது அருந்தும் நபரின் உடல்நிலை…
மது வகையில் உள்ள போதைதன்மையின் அளவு.. பீர் போன்ற வகைகளில் போதைத்தன்மை குறைவாகவும்.. நாட்டு சாராயத்தில் கணக்கிட முடியாத அளவில் போதைத்தனம் காணப்படும்..
உணவுடன் சேர்த்து குடித்தாரா இல்லையா..
குடித்த மதுவின் அளவு.. வேறு ஏதேனும் போதைப் பொருள் உடன் கலந்து குடித்தல்.
உடற்மாற்றங்களை உருவாக்கும் முக்கிய காரணிகள்.. சுய நிலை தவறுதல்; இதயத்துடிப்பு அதிகமாக இருக்கும்… உயர் ரத்த அழுத்தம் உண்டாகும்.. ரத்த சர்க்கரை அளவு.. ஆரம்ப கட்டத்தில் மிக அதிகமாகவும்.. பின்னர் மிகக்குறைந்த அளவு ரத்த சர்க்கரை அளவை hypoglycemia எட்டி விடும்..
சிலருக்கு alcohol tolerance என்ற போதைப் பொருட்களுக்கு ஈடு கொடுக்கும் உடல் நிலை குறைவாக இருக்கும் போது.. கொஞ்சம் மது அருந்தும் போதே.. பெரிய அளவில் விளைவுகளைக் கொடுக்கும். இதில் வாந்தி அதிகமாக சுயநினைவு சரிவர இல்லாமல் இருக்கும் போது..
வெளியேவரும் வாந்தி நுரையீரல் பாதையில் சென்று விடும்.. ASPIRATION PNEUMONITIS என்ற சொல்லப்படுவது உயிருக்கு ஆபத்தான நிலையாகும்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் மது அருந்துவது.. ரத்த சர்க்கரைகண்ட்ரோல் இல்லாமல் காணப்படும்..Lactic acidosis தொடர்ந்து குடித்தால் கோமா நிலை அடைவது நடக்கும்.
ஜீரண மண்டலம் பாதிக்கப்பட்ட நிலையில்.. தொடர் மதுப்பழக்கம்.. உணவுக் குழாய் கிழிய வழி வகுக்கும்… அதிக ரத்தம்.. வாந்தியாக.. வரும்.
நெடுநாளைய மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள்… கணைய நோய்கள்.. pancreatitis . கணைய கற்கள் pancreatic calcific disease.. பித்தப்பை வீக்கம் cholestasis.. மற்றும் பித்தப்பை வலி ஏற்படும் cholecystitis..பித்தப்பை கற்கள் cholelithiasis.
கல்லீரல் பாதிப்பு ஏற்படும் alcoholic liver disease.. fatty liver இருப்பவர்களுக்கு சீக்கிரமே alcoholic hepatitis ஏற்படும்.. பின்னர் கல்லீரல் செல்கள் சுருங்கி விடுதல் alcoholic liver cirrhosis.. நாட்கணக்கில் அடங்காமல் மது அருந்துவது அதிகமானால் கல்லீரல் செயல் இழப்பு.. liver failure நடக்கும்..
இதற்கு நடுவில் கள்ள சாராயம்..என்பது மெத்தனால் methanol வகையைச் சேரும்.. இந்த மெத்தனால்.. formaldehyde ஆக மாற்றம் அடையும் போது.. இந்த வேதிப்பொருளை கல்லீரால் ஏற்றுக் கொள்ள முடியாது… கடுமையான விஷத்தன்மை கொண்டது..
ரத்தத்தில் உள்ள அதிக ஃபார்மால்ட்டிஹைட் கண் பார்வை பறிபோதல்.. சிறுநீரக செயல் இழப்பு ..மூளை ரத்த நாளங்களில் வெடிப்பு ஏற்பட்டு கோமா நிலை அடைதல்.. இருதயத்தில் ரத்த நாளங்களில் வெடிப்பு காரணம்.. கார்டியாக் அரெஸ்ட் போன்ற இருதய செயல்படாமல் மரணம் போன்ற பிரச்சனைகள் கொடுக்கும் வகையில் விஷம் வாய்ந்தது..
கர்ப்ப காலத்தில்.. அயல் நாடுகளில்… பெண்கள் மது அருந்துவது தடைசெய்யப்பட்ட ஒன்று.. foetal alcohol spectrum disorders என்று சொல்லும் அளவுக்கு அதிகமாக சிசுவின் மூளை வளர்ச்சி.. நரம்பு மண்டலம் பாதிக்கபடும் அளவுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.. ஏனெனில் எத்தனால் வேதிப்பொருளை சிசுவின் கல்லீரால் ஏற்றுக்கொள்ள முடியாது.. அது சிசுவின் வளர்ச்சியை கடுமையாக பாதிக்கும்.