Breaking News :

Friday, May 02
.

60/65 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டும் படிக்கவும்!


1.பாத்ரும் செல்லும் பொழுது (வீட்டில்) கதவை சும்மா சாத்தி வைங்க, தாழ் போடவேண்டாம்.

2.வீட்டை தண்ணீர் கொண்டு தரையை துடைக்கும்பொழுது நடக்க வேண்டாம்.

3.ஸ்டூல், நாற்காலி, பெஞ்ச் போன்றவற்றின் ‌மீது ஏறி பொருட்களை எடுப்பது சுத்தம் செய்வது, துணிகளை
காயப்போடுவது, போன்ற வேலைகளை தவிர்க்கவும்.

4.கார் இருந்தால் தனியாக ஓட்டவே கூடாது. கூட யாராவது கண்டிப்பாக இருக்கவேண்டும்.

5.மாத்திரை மருந்துகளை  வேளாவேளைக்கு தவறாமல் எடுத்துக் கொள்ளவும்.

6.உங்களை எந்தவிஷயம் சந்தோஷப்படுத்துமோ அதை யாருக்காகவும், காம்ப்ரமைஸ் செய்ய வேண்டாம்.

7.வங்கிக்கு பணம்  எடுக்கச் சென்றால்  தனியாகச்செல்ல வேண்டாம். துணையுடன் செல்லவும்.

8.வீட்டில் தனியாக இருக்கும் பொழுது அறிமுகமில்லாதோர் யாராவது வந்தால் கூடியவரை அச்சூழலை தவிர்க்கவும், அல்லது மிகவும் எச்சரிக்கையுடன் கையாளவும்.

9.கூடியவரை படுக்கையறை, குளியலறை, கழிப்பறை  ஆகியவற்றில் காலிங் பட்டன் அவசியம். அசாதாரண சூழலில் அழைப்பதற்கு உதவும்.

10.சைக்கிள் முதல் கார் வரை அனைத்து வாகனங்கள் ஓட்டுவதை முடிந்த அளவு தவிர்க்கவும்.

11.வாழும் காலத்தில் உடல்நலம், மன அமைதி, மன மகிழ்ச்சி, உறவினர் நண்பர்கள் தொடர்பு மற்றும் துணை போன்றவை அதி முக்கியம். மிக மிக அவசியம். எல்லோரிடமும் இனிமையோடு பழகவும்.

12.கடந்தகாலம்  மற்றும் எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் வேண்டாம். நிகழ்காலம் உன்னதமானது. அதை முழுமையாக, மகிழ்ச்சியாக,
இனிமையாக  அனுபவித்து வாழுங்கள்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.