தண்ணீரில் சோம்பு கலந்த பருகி வந்தால் உடம்பில் உள்ள ஊளைச் சதை குறைவதுடன் உடலில் அழகு கூடும்.
உண்ணும் உணவில் பூண்டு, வெங்காயம் அதிகமாகச் சேர்த்து சாப்பிட்டால் உடலில் உள்ள தேவையற்றக் கொழுப்புகள் குறைந்து உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.
பப்பாளி காயைச் சமைத்து உண்டு வந்தால் உடல் பருமன் குறையும்.
மந்தாரை வேரை நீர்விட்டு பாதியாக காய்ச்சி தொடர்ந்து குடித்தால் பருத்த உடல் மெலிந்து குறையும்.
அமுக்கிரா கிழங்கு வேர், பெருஞ்சீரகம் பாலில் காய்ச்சி குடித்து வந்தால் உடல் எடை குறையும்.
சுரைக்காய் வாரத்திற்கு 2 தடவை சாப்பிட்டு வந்தால் வயிற்றுச் சதை குறையும்.
சதை போடுவதை குறைக்க, தேநீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலை வேளையில் குடிக்க வேண்டும்.
வாழைத்தண்டு சாறு, அருகம்புல் சாறு இவற்றில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து குடித்து வந்தால் சதை போடுவதைத் குறைக்கலாம்.
முக்கியமாக காலையில் அரை மணி நேரம் நடைபயிற்சி மேற்கொண்டால் கொழுப்பும் கரைவதுடன், உடல் எடையும் குறையும்.