Breaking News :

Saturday, May 03
.

முதல் இரவில் என்ன செய்ய வேண்டும்?


பெண்களுக்கு சில சந்தேகங்கள்  சில,

என் மார்பு அவ்வளவு அழகாக இருக்காதே இது என் கணவருக்கு பிடிக்குமா?

என் உடல் பாகங்களில் சில தழும்புகள் எல்லாம் இருக்குமே, அவருக்கு அதெல்லாம் பிடிக்காமல் போய்விடுமோ?

முதல் இரவிலே அவர் பல எதிர்பார்ப்புகளை முன் வைத்தால் என்ன செய்து?

எனக்கு இப்படி இருக்குதே, என்னை இப்படியே ஏற்றுக் கொள்வாரா?

என்ன இப்படி இருக்கனு சொல்லிடுவாரா?

அவருக்கு என்னை பிடிக்காமல் போய்விட்டால்?

இதே போன்ற எண்ணற்ற பயங்களுடன் தான் ஒவ்வொரு பெண்ணும் முதல் இரவை நோக்கி பயணிக்கிறாள்.

ஒரு பெண்ணிற்கு இது போன்ற பயங்கள் என்றால் ஆண்மகனிற்கு சொல்லவே வேண்டாம்.

இதை சரிவர செய்யவில்லை என்றால் என்னவள் என்னை ஒன்றுக்கும் லாக்கி இல்லாதவன் இதை கூட சரிவர செய்ய தெரியல நீ எல்லாம்...., என்று நினைத்துவிடுவாளோ?

சொதப்பிட்டோம்னா?

எல்லாம் சரியா வருமா?

தோற்றுவிட்டோம்னா அசிங்கமா பார்ப்பாலோ?

இன்னைக்குனு பார்த்து எதுவும் சரியா நடக்கவில்லை என்றால்?

இன்னும் பல....

அவன் வேண்டாத தெய்வம் இருக்காது.

பரிட்சைக்கு கூட அவன் அப்படி பயந்துருக்க மாட்டான்.

முதல் இரவு இருவருக்குமே பயம் கலந்த இரவு தான்.

அந்த பயத்தை எதிர்கொள்ளுவது எப்படி என்பதை பற்றிய ஒரு பாடத்தை கையில் எடுத்து பதில் எழுவதில் மகிழ்ச்சியே எனக்கு.

எதிர்பார்ப்பை ஓரம் கட்டுங்கள்

நீங்கள் படத்தில் பார்த்த கதா நாயகிகள், கதா நாயன்கள் போன்று உங்கள் துணை இருக்க மாட்டார்கள்.

தொப்பையுடனும், தொடைகள் கருத்தும் உடலின் பல பகுதிகளில் ரோமங்கள் கொண்டும் தான் இருப்பார்கள். இது தான் இயற்கை. தொலைக்காட்சியும், யூடிப்பும் உங்கள் கண்களுக்கு விருந்து படைத்து உங்களை இயற்கையிலிருந்து இழுத்துச் சென்றுவிட்டது வெகு தூரம். உங்கள் துணையின் உடல் உறுப்புகள் பற்றிய எதிர்ப்பார்ப்பை குறைத்துக் கொண்டு முதல் இரவிற்கு செல்லுங்கள். உண்மையில் அந்த இரவு உங்களை மகிழ்விக்கும்.

ஏற்றுக் கொள்ளுங்கள் :

உங்கள் துணை எப்படி இருந்தாலும் அவரை ஏற்றுக் கொண்டு அரவணைத்துக் கொள்ளுங்கள். நீ எப்படி இருந்தாலும் நான் உன்னை நேசிக்கிறேன், உன்னை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன் சொல்லி நம்பிக்கைக் கொடுங்கள். அது சிறந்த ஒன்றை உங்கள் துணை உங்களுக்கு பரிசளிக்க உதவும். உங்கள் துணைக்கு நீங்கள் அளிக்கும் நம்பிக்கை தான் அந்த இரவை ஒரு வெற்றியுள்ள இரவாக்கும்.

தெரிந்து வைத்திருக்கும் அத்தனை வித்தையையும் ஒரே இரவில் செய்து முடிக்க வேண்டிய அவசியம் இல்லை.

முதல் இரவு என்பது ஒரு ரேஸ் இல்லை.அடுத்தடுத்து வரும் இரவுகளில் படிப்படியாக முன்னேறுங்கள்.

முதல் இரவிலே எல்லாம் என்பது சரியில்லை.

உங்கள் துணை சொளகரியமாக இருக்கும் ஒரு உணர்வை பரிசளித்திடுங்கள். அதற்கு அதிகம் பேசுங்கள்.  கம்யூனிகேஷன் தான் முதலிரவின் மூலத்தனமே.

எவ்வளவு பேச முடியுமோ அவ்வளவு பேசுங்கள். அவர்களின் எதிர்ப்பார்ப்பு என்ன? ஆசை கனவுகள் என்ன? அந்த இடம் மற்றும் சூழல் அவர்களுக்கு நல்ல மன நிலையை கொடுத்திருக்கிறதா? அவர்கள் பேச ஏதேனும் நினைத்திருக்கிறார்களா? என்பதை கேளுங்கள்.

இனி எதையும் மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. மனம் விட்டு பேசுங்கள். உங்கள் ஆசைகள் எதிர்ப்பார்ப்புகள் அத்தனையையும் சொல்லுங்கள். அதை உங்கள் துணை செய்திட கால அவகாசம் கொடுங்கள்.

நான் உன் கூட தான் இருக்குறேன் எப்பவும் இருப்பேன். பயப்படாத. இன்னைக்கு தோற்றால் நாளைக்கு ஜெயிக்கலாம். நீ வெற்றி பெரும்வரை நானும் உனக்கு உதவுவேன் என்னும் வார்த்தைகள் போதும்.

மனைவியிடம் முதல் இரவில் தோற்றுவிடக் கூடாதென்பதற்காக விபச்சாரம் செய்யும் ஒரு பெண்ணிடம் இந்த கலையை கற்றுக் கொண்டு செல்ல வேண்டிய அவசியமே இல்லை. இன்றைய தலைமுறையினர் செய்யும் தவறே இது தான்.

முதல் இரவின் வெற்றி என்பது முதலில் நடக்கும் இரவில் இல்லை உண்மையில். முதல் இரவின் வெற்றி உங்கள் முதல் குழந்தையை கையில் ஏந்துவீர்கள் பாருங்க அது தான்.

சில விசயங்கள் நான் வேதத்தின் மூலம் கற்றுக் கொண்டது. அதை பகிர்ந்து கொள்கிறேன் விருப்பம் இருந்தால் மட்டும் தொடர்ந்து வாசியுங்கள்.

கணவர்களே உங்கள் மனைவியினிடத்தில் அன்பு கூறுங்கள். அவர்களை கசந்து கொள்ளாதீர்கள். ஆங்கிலத்தில், do not be harsh with them.

வேசித்தனம் மற்றும் விபச்சாரம் எல்லாம் தவறென்பது அனைவரும் அறிந்ததே. அதை முற்றிலும் அளிக்கக் கூடிய வல்லமை பெற்ற ஒன்று விவாக மஞ்சம். அத்தகைய அசுத்தம் இல்லாமல் போக வேண்டும் என்றால் விவாக மஞ்சம் அசுசிப்படாததாக இருக்கட்டும்.

மனைவியானவள் தன் சுய சரீரத்திற்கு அதிகாரியல்ல, புருஷனே அதற்கு அதிகாரி; அப்படியே புருஷனும் தன் சுய சரீரத்திற்கு அதிகாரியல்ல, மனைவியே அதற்கு அதிகாரி.

சிம்பிளா சொல்லனும்னா இது தான் முதல் இரவின் அடிப்படை விதி.

எனக்கு பிடித்த ஒன்றை இருவரிகளில் இணைத்துவிட்டு செல்கிறேன்.

"உன் இளவயதின் மனைவியோடே மகிழ்ந்திரு.

அவளே நேசிக்கப்படதக்க பெண்மானும், அழகான வரையாடும் போலிருப்பாளாக; அவளுடைய ஸ்தனங்களே (மார்பகங்கள்)/உன்னைத் திருப்தி செய்வதாக; அவளுடைய நேசத்தால் நீ எப்பொழுதும் மயங்கியிருப்பாயாக...."

முதல் இரவை பயமும், எதிர்ப்பார்ப்பும் இன்றி எதிர் கொள்ளுங்கள். இனி எல்லாம் சுப(க)மே!

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.

News Hub