Breaking News :

Tuesday, April 15
.

உடற்பயிற்சியின் போதே மாரடைப்பு ஏற்படுவது?


புனீத் ராஜ்குமார் அவர்களின் அகால மரணத்திற்கு முதலில் என் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன். அவரின் படங்களை பார்த்து இருக்கிறேன்.. நல்ல நடிகர்.. பாடகர்..46 வயதில் கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டது .. மிகவும் துரதிர்ஷ்டவசமானது.. யாராலும் ஏற்க இயலாது.

சாதாரணமாக.. வெளிப்புறத்தில் ஆரோக்கியமாக இருக்கும் மனிதர்கள்.. நிஜத்தில் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

பலருக்கு.. உயர் ரத்த அழுத்தம் இருக்கலாம்.. அல்லது நீரிழிவு பாதிப்பு இருக்கலாம்..இது போன்ற வாழ்வியல் நோய்களை பலர்.. உணவு மற்றும் உடற்பயிற்சி செய்வது என்றே சமாளித்து விடலாம் என்று நினைத்து கொண்டிருப்பதை நிறைய சந்தர்பங்களில் பார்க்க முடிகிறது..

ஆனால்.. அவரவர்.. குடும்ப உறுப்பினர்களின் அதாவது.. இரத்த உறவினர்கள் கொண்டு உள்ள இருதய நோய்கள்.. மூளை பக்கவாதம்.. கல்லீரல் கோளாறுகள் . பரம்பரை தன்மை காரணமாக அடுத்த தலைமுறையை பாதிக்கும் வாய்ப்பு மிக அதிகமாவே உள்ளது என்பதை மறுக்க முடியாது.

புனீத் அவர்கள் தந்தை அமரர். ராஜ்குமார் இறப்பும் . இதே போல கார்டியாக் அரெஸ்ட் வகை மரணம் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.  அதேபோல்.. தான்.. அவரின் தாயாரின் மரணமும்.  இவர்கள் தாய் தந்தை இருவரும் இரத்த வழி உறவினர்கள் கூட..இவர்கள் இருவரும் எழுபது வயதுகளில் மரணத்தை சந்தித்தனர் என்றால்..

புனீத் அவர்களின்..இரண்டாவது மூத்த சகோதரர்.. ராகவேந்திரா ராஜ்குமார் என்பவர்.. இருதய நோய்களால் பாதிக்கப்பட்டு ஏற்கனவே நாற்பதுகளில் பேஸ்மேக்கர் பொருத்திக் கொள்ளும் இருதய நோய் அறுவை சிகிச்சை பெற்று கொண்டதாக தகவல்கள்.  உடற்பயிற்சி தீவிரமாக செய்வதால் தான் ஆரோக்கியமாக இருக்கிறோம் என்று புனீத் அவர்கள் நினைத்து இருக்கலாம்..

அவர் இறப்பதற்கு முந்தைய நாள்.. ரவிகிரண் என்ற இசையமைப்பாளரின் பார்ட்டியில் கலந்துகொண்ட போதே.. உடல் நலம் பாதிப்பு உள்ளது போல உணர்ந்தார் என்றும் செய்திகள்..

ஒரு வேளை அவருக்கு.. பலருக்கு இடது கைகளில் தான் வலி பரவலாக இருக்கும் நிலையில் .. சிலருக்கு ஏற்படும் வலது கைகளில் வலி உண்டாகி இருக்கலாம்.. தலை சுற்றல் மற்றும் மயக்கம் ஏற்படுவது போன்ற தொந்தரவு இருந்து இருக்கலாம்.. அவற்றையும் மீறி .. உடற்பயிற்சி செய்ய ஜிம் சென்ற பிறகு தான்.. இப்படி ஒரு தீவிர மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது..

பல நேரங்களில்.. ட்ரிபிள் வெஸல் ப்ளாக் என்ற மூன்று முக்கிய இருதய தமனிகளில்.. அடைப்பு ஏற்பட்டு விடும் பட்சத்தில்.. இறப்பு விகிதம் மிக மோசமாக உள்ளது என்பதை உணர வேண்டும்.

அதனால்.. நாற்பது வயதை அடைந்த பிறகு அனைவரும்.. இருதய பரிசோதனை களான எக்கோ கார்டியோக்ராம்.. வருடந்தோறும் செய்து கொள்ள வேண்டும்.. ஏதேனும் மூச்சு திணறல் மற்றும் இடது மற்றும் வலது கைகளில் வலி.. தாடை வலி அல்லது அஜீரண கோளாறுகள்.. நெஞ்சில் எரிச்சல் தொந்தரவு உள்ளது என்றால் உடனே ஈசிஜி செய்து பார்க்க வேண்டும்..

அதேபோல்.. நீரிழிவு நோய் உள்ளதா என்பதை சரிபார்க்கும்.. HbA1c மற்றும் இரத்த கொழுப்பு கள் எந்த அளவுக்கு உள்ளது என்பதை ஒவ்வொரு ஆறு மாதங்கள் ஒருமுறை பார்க்க வேண்டும்.  ரத்த உறவுகளில்.. இருதய நோய்கள் இருக்கும் போது.. இன்னமும் நாற்பது வயதிற்கு முன்னரே பரிசோதனை செய்து பாரப்பது நல்லது..

அதேபோல்.. ஜிம் செல்பவர்கள்.. தேவையற்ற பாடி பில்டிங் பவுடர்கள்.. ஹார்மோன் மாத்திரை ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.. தசைகளை பில்டப் செய்கிறேன் பேர்வழி என்று ஹார்மோன் டெஸ்ட்டோஸ்ட்ரான் சுரப்புகளை மாற்றம் செய்ய நேரிட்டால் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.