Breaking News :

Tuesday, April 15
.

காய்ச்சல் அடித்தால் பச்சை தண்ணீரில் துடைக்கலாமா?


இதற்கு பெயர்  TEPID SPONGING. முதலில் இவற்றை rubbing alcohol என்ற திரவத்தை தடவி உடற் வெப்பத்தைக் குறைப்பார்கள்.. அது அதிகமாக கிடைக்காத பட்சத்தில் நம் இந்திய டாக்டர்கள் கையாளும் முறையே இந்த தண்ணீரைத் தொட்டு உடல் எங்கும் துடைத்து காய்ச்சல் அதிகமாகாமல் பார்த்துக் கொள்வது.. காய்ச்சல் வந்தால் போர்வை கம்பளி கொண்டு போர்த்தி வைக்க கூடாது. அவை உடற் வெப்பம் இன்னும் அதிகமாக்கி விடுகிறது..

Evaporation and conduction என்ற முறை மூலமாக.. உடற் வெப்பத்தை நீர் மூலம் நீர் ஆவியாக வெளியேற்றி.. காய்ச்சலை கட்டுக்குள் வைக்கவே இந்த சிகிச்சை.

காய்ச்சல் என்பதே உடல் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது என்பதே.. .உடற் வெப்பம் அதிகமாக அதிகமாக முகம் வாய் மற்றும் உடலெங்கும் ..தோல் நீர்ச்சத்து குறைபாடு காரணம் வெளுத்து இருக்கும்..அதனால் தண்ணீர் .. ORS திரவம் நிறைய குடிக்க வைக்கவும்.  

அதிகப்படியான காய்ச்சலால் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக குழந்தைகளுக்கு வலிப்பு நோய் காண முடியும்.  அதற்கு பெயர் FEBRILE SEIZURES.. ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இவை வருவது அதிகம்..

ஏனெனில்.. அதிகப்படியான உடற் வெப்பத்தை குழந்தையின் மூளையால் தாங்கிக்கொள்ள முடியாமல் ஜன்னியாக வலிப்பை ஏற்படுத்தி விடும். குழந்தை சுயநினைவை இழந்து மயக்கம் அடையும் வாய்ப்பு உள்ளது..பரம்பரை தன்மை உள்ளது.. பெற்றோர் உடன் பிறந்தவர்களுக்கு இந்த பிரச்சினை உள்ளது என்றால் குழந்தைக்கும் வரும்.

அதனால்.. குழந்தைக்கு எப்போது அதிக காய்ச்சல் வந்தாலும்.. முதலுதவியாக .. உங்கள் மருத்துவர் குழந்தையின் உடல் எடையை அனுசரித்து முன்னரே கொடுத்துள்ள டோஸ் பாராசிட்டமால் மருந்து கொடுத்து விட்டு.. மிகவும் இள வெதுவெதுப்பான தண்ணீரில் உடல் முழுவதும் குழந்தைக்கு துடைத்து விட வேண்டும்.. குறைந்தது ஒரு பத்து நிமிடம் இதை செய்ய வேண்டும்.  பிறகு உங்கள் மருத்துவரிடம் குழந்தையை அழைத்து சென்று ஆலோசனை பெற்று கொள்ளவும்..

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.