குழந்தைகள் விடுமுறை தினங்களில் ஏதேனும் நொறுக்குத் தீணி வேண்டும் என அடம்பிடிப்பது வழக்கம். அந்த வகையில், நமது வீடுகளில் குழந்தைகளுக்கு சுவையும், சத்தும் அளிக்கும் வண்ணம் அசோகா அல்வா செய்து கொடுக்கலாம். வாங்க அதனை எப்படி செய்யலாம் என இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
பாசிப் பருப்பு 1 கப்
வெள்ளை சர்க்கரை 3 கப்
கோதுமை மாவு 1/4 கப்
ரீபைன்ட் ஆயில் அல்லது நெய் 2 கப்
முந்திரி கொஞ்சம்
கிராம்புப் பொடி 1/2 டேபிள்ஸ்பூன்
கேசரி பவுடர் கொஞ்சம் (தேவையென்றால் போடலாம்)
செய்முறை:
முதலில் பாசிப் பருப்பை வெறும் வாணலியில் லேசாக வறுத்து, குக்கரில் நன்கு குழையும் வண்ணம் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் சிறிது நெய் விட்டு முந்திரி பருப்பை வறுக்கவும். சிறிது எண்ணெய்யில் கோதுமை மாவை சிவக்க வாசனை வரும் வரை வறுக்கவும்
கோதுமையுடன் வேக வைத்த பருப்பு, சக்கரை, கேசரி பவுடர் சிறிதளவு, கிராம்புப் பொடி சேர்த்து கிளரவும். நன்கு சுருண்டு வந்தவுடன் அதனுடன் நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து இறக்கிவைத்து, நமது குழந்தைகளுக்கு கொடுக்கலாம். அதனை சாப்பிட்டு உங்கள் குழந்தை ஆனந்தபடுவார்கள்....