ஒரு நெல்லிக்கனி உடலுக்கு தரும் சத்துக்களை ஆப்பிள் மூலம் பெறுவதாக இருந்தால் நான்கு ஆப்பிளாவது தேவைப்படும். சற்று இனிப்பு, அதிக புளிப்பு, மிஞ்சீய துவர்ப்பு என்று கொண்டிருக்கும் நெல்லிக்கனியின் மருத்துவக்குணங்கள் குறித்து தெரிந்துவைத்திருக்கிறோம்.
நெல்லிக்கனியை அப்படியே சாப்பிடமுடியாதவர்கள் தேன் நெல்லி சாப்பிடலாம். அப்படி என்னதான் இருக்கும் தேன் நெல்லியில் தெரிந்துகொள்வோம். செய்முறை விளக்கங்களோடு.
தேன் நெல்லி தயாரிப்பு:
நெல்லிக்காய் - 1 கிலோ
சுத்தமான் தேன் - 1 கிலோ (தேவைக்கேற்ப கூடுதலாகவும் பயன்படுத்தலாம்)
கண்ணாடி அல்லது மூடியிட்ட பீங்கான் ஜாடி.
நெல்லிக்காயை சுத்தமாக கழுவி தண்ணியில்லாமல் வடிக்க வேண்டும். பிறகு அதை இட்லி பானையில் இலேசாக வேக வைத்து எடுக்கவும். நன்றாக வேகவேண்டும் என்றில்லை. பாதி அதன் தோல் மிருதுவானால் போதுமானது.
இவை ஆறு மாதங்கள் வரை கெடாமல் இருக்கும் என்பதோடு அனைவரும் சாப்பிடலாம் என்பதால் கிலோ கணக்கில் செய்து வைத்துகொள்ளலாம்.