மனித உடலில் உள்ள முக்கியமான 12 உறுப்புகளில் ஒவ்வொரு உறுப்பும் 2 மணி நேரம் அதனுடைய உயிர்ச்சக்தி ஓட்டத்தின் உச்ச கட்ட இயக்கத்தில் இருக்கும். இது இயற்கை.
ஒருவர் இயற்கையின் விதிகளை மீறும் போது இயற்கை அவருக்கு அளிக்கும் தண்டனையே நோய்.
ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருக்க வேண்டு மென்றால் அவனுடைய உடல் மொழியைக் கேட்கக் கற்றுக் கொள்ளவேண்டும்.
கீழ்க்கண்ட வழிகளை உடல் உறுப்புகள் உங்களைப் பின்பற்றக் கூறுகின்றன.
நமது உடல், உள் உறுப்பு ஒவ்வொன்றும் ஓய்வில்லாமல் நாள் முழுவதும் இயங்கிக்கொண்டிருக்கிறது. ஆனால் தினசரி ஒவ்வொரு உறுப்பும் இரண்டு மணி நேரம் மிகவும் சக்தியுடன் இயங்குகிறது.
Lungs – நுரையீரல்
சக்தி ஓட்டம் அதிகம் உள்ள நேரம் விடியற்காலை 3.00 மணிமுதல் 5.00 மணிவரை நுரையீரலின் அதிக சக்தி நேரம். இந்த நேரத்தில்சுவாசப் பயிற்சி செய்து காற்றின் மூலம் வரும் பிராண சக்தியை உடலுக்குள்அதிகமாகச் சேகரித்தால்ஆயுள் நீடிக்கும்.
தியானம் செய்யவும் ஏற்ற நேரம் இது. ஆஸ்துமா நோயாளிகள் இந்த நேரத்தில் மிகவும் சிரமப்படுவார்கள்.
Large Intestine பெருங்குடல்
சக்தி ஓட்டம் அதிகம் உள்ள நேரம் விடியற்காலை 5.00 - 7.00 மணிவரை பெருங்குடலின் அதிக சக்தி நேரம். காலைக்கடன்களை இந்த நேரத்துக்குள் முடித்தே தீர வேண்டும்.
மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்த நேரத்தில் எழுந்து கழிவறைக்குச் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் நாளடைவில் மலச்சிக்கல் தீரும்.
உயிரணுக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ள நேரமும் கூட இதுவே. குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். அதனால் நரம்புத் தளர்ச்சி ஏற்படாது.
Stomach இரைப்பை
சக்தி ஓட்டம் அதிகம் உள்ள நேரம் காலை 7.00 - 9.00 மணிவரை வயிற்றின் அதிக சக்தி நேரம். இந்த நேரத்தில் கல்லைத்தின்றாலும் வயிறு அரைத்துவிடும்.
காலை உணவை பேரரசன் போல் உண்ணவேண்டும். இந்த நேரத்தில் சாப்பிடுவதுதான் நன்குசெரிமானமாகும்.
Spleen மண்ணீரல்
சக்தி ஓட்டம் அதிகம் உள்ள நேரம் காலை 9.00 - 11.00 மணி வரை. காலையில் உண்டஉணவை மண்ணீரல் செரித்து ஊட்டச் சத்தாகவும், இரத்தமாகவும் மாற்றுகிற நேரம் இது. இந்த நேரத்தில் பச்சைத் தண்ணீர்கூடக் குடிக்கக்கூடாது.மண்ணீரலின் செரிமானசக்தி பாதிக்கப்படும்.
அப்படி எதுவும் சாப்பிட்டால் மண்ணீரல் பாதிப்பு ஏற்படும் உடலில் வெப்பம் அதிகரிக்கும். சாப்பிட்டதும் ஏற்பட வேண்டிய சுறுசுறுப் பிற்கும், புத்துணர்ச்சிக்கும் பதிலாக அசதியும், தூக்கமும் வரும்.
நாளடைவில் பசி குறையும். (நீரிழிவு நோயளிகளுக்கு படபடப்பு, மயக்கம், தூக்கக் கலக்கம் ஏற்படும்.) நீரழிவு நோயாளிகளுக்கு மோசமான நேரம் இது.
Heart இருதயம்
முற்பகல் 11.00 மணிமுதல் பிற்பகல் 1.00 மணி வரை இதயத்தின் அதிக சக்தி நேரம்.
இந்த நேரத்தில் அதிகமாகப் பேசுதல், அதிகமாகக் கோபப்படுதல்,அதிகமாகப் படபடத்தல்கூடாது. கடினமான வேலை ஏதும் செய்யாமல் தண்ணீர் மட்டும் குடிக்கலாம், மருத்துவ மனைகள் எல்லாம் விழிப்புடன் இருக்கும் நேரமிது. இதயம் பாதிக்கப்படும். இதய நோயாளிகள் மிகமிக எச்சரிக்கையாக இருக்கவேண்டிய நேரம்.
காரணம் இந்த நேரத்திற்தான் இருதய நோயாளிகளுக்கும், நீரிழிவு நோயாளிகளுக்கும் மாரடைப்பு ஏற்படும் சாத்தியக் கூறுகள் அதிகமாக இருக்கும். இதைத் தவிர்க்க இவர்கள் இந்த நேரத்தில் தூங்காமல் இருக்க வேண்டும்.
தூங்கினால் அபான வாயு பிராண வாயுவுடன் கலந்து மாரடைப்பு, முகவாதம், பக்கவாதம் அல்லது மூட்டுவாதம் மற்றும் உடல் வலிகளை நிச்சயம் ஏற்படுத்தும்.
Small Intestine சிறுகுடல்
சக்தி ஓட்டம் அதிகம் உள்ள நேரம் பிற்பகல் 1.00 மணிமுதல் 3.00 மணிவரை சிறுகுடலின் அதிக சக்தி நேரம் இந்த நேரத்தில் மிதமாக மதிய உணவை உட்கொண்டு மதிய உணவை முடித்து 3 – 5நிமிடங்கள் கண்களை மூடி ஓய்வு எடுக்கலாம். படுத்து உறங்குவதை இந்த நேரத்தில் தவிர்க்க வேண்டும்.
Urinary Bladder சிறுநீர்ப்பை
பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை சிறுநீர்ப்பையின் அதிக சக்தி நேரம். நீர்க்கழிவுகளை வெளியேற்ற சிறந்த நேரம்.
பானங்களோ, தண்ணீரோ குடிக்க உகந்த நேரம். முதுகு, இடுப்பு வலிகள் வரும் நேரம்.
Kidney சிறுநீரகம்
மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை சிறுநீரகங்களின் அதிக சக்தி நேரம். வழக்கமான வேலையில் இருந்து விடு பட்டு இரவுக்கு முன்பாகவே வீடு வந்து சேரவேண்டும். ரீனல்பெயிலியர் முதல் நீர்க்கடுப்பு வரை ஏற்படும்.
பகல் நேர பரபரப்பிலிருந்து விடுபட்டு அமைதி பெற, எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க,தியானம் செய்ய, வழிபாடுகள் செய்ய சிறந்த நேரம்.
Pericardium இருதய உறை
இரவு 7.00 மணி முதல் 9.00 மணி வரை,பெரிகார்டியத்தின் அதிக சக்தி நேரம்.
பெரிகார்டியம்என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும். ஒரு ஜவ்வு. இதயத்தின் Shock absorber. இரவுஉணவுக்கு உகந்த நேரம்.மார்பு வலி, பாரம், படபடப்புத் தோன்றும்.
triple Warmer மூவெப்பமண்டலம்
இரவு 9.00 மணி முதல் 11.00 மணி வரை அதிக சக்தி நேரம்.
டிரிப்பிள் கீட்டர் ஒரு உறுப்பல்ல, உச்சந்தலை முதல் அடி வயிறு வரை உள்ள மூன்று பகுதிகளை இணைக்கும்பாதை. இந்த நேரத்தில் உறங்கச் செல்வது நல்லது.இந்த நேரத்திற்குப் பின்பு கண் விழித்திருப்பதோ படிப்பதோ கூடாது.
Gall Bladder பித்தப்பை
இரவு 11.00 மணி முதல் 1.00 மணி வரை பித்தப்பை இயங்கும் அதிக சக்தி நேரம்.
இந்த நேரத்தில் தூங்காது விழித்திருந்தால் பித்தப்பை இயக்க குறைபாடு ஏற்படும், அடுத்த நாள் உங்கள் முழு சக்தியையும் இழக்க நேரிடும்.
Liver கல்லீரல்
இரவு 1.00 மணி முதல் விடியற்காலை 3.00 மணி வரை கல்லீரலின் அதிக சக்தி நேரம். இந்தநேரத்தில் நீங்கள் உட்காந்திருக்கவோ விழித்திருக்கவோ கூடாது.
கட்டாயம் படுத்திருக்க வேண்டும் உடல் முழுவதும் ஓடும் ரத்தத்தை கல்லீரல் தன்னிடத்தே வரவழைத்து சுத்திகரிக்கும் நேரம் இது.
இந்த பணியை நீங்கள் பாதித்தால் மறுநாள்முழுவதும் சுறுசுறுப்பில்லாமல் அவதிப்படுவீர்கள், கண்டிப்பாக கண்ணின் பார்வை சக்தி குறையும். உறக்கம் பாதிக்கும். உடலில் அரிப்பு, நமைச்சல் அதிகரிக்கும்