காமத்தை ஒரு பெண் முழுமையாக அனுபவிக்கும் போது அவள் காமத்திலிருந்து முழுவதுமாக விடுதலை அடைகிறாள் பின்பு அவள் அன்பின் சொரூபமாக மாறுகிறாள்.
காமத்திலிருந்து தன்னை விடுவித்த ஆணிடம் அவள் மிகவும் நேசம் கொள்கிறாள், மதிப்பு கொள்கிறாள்.
காமம் பொத்தி பொத்தி பாதுகாக்க வேண்டிய விஷயம் இல்லை என்று காமசூத்திரம் கூறுகிறது.
குடும்ப உறவுகள் சுக்குநூறாக மாறுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும், 90 சதவிதத்திற்கு மேல் தூண்டிவிடப்பட்டு முழுமையாக நிறைவேறாத காமமே.
தந்திரா பெண்களை மிகுந்த மரியாதையுடனும், பெண்களின் இயற்க்கையானா தன் பாலுறவின் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் ஆண்களுக்க விளக்குவதே ஆகும்.
அதே போல் ஆண்களின் தேவைகளை பூர்த்தி செய்வதாகும்.
ஒரு காலத்தில் பெண்களை சமையல் அறையிலிருந்து வெளியேற விடாமல் இந்த சமூகம் அவர்களை வீட்டிற்குள் அடைத்து வைத்திருந்தது ஆனால் இன்றோ ஒரு ராணுவ போர் விமானங்களை இயக்கும் வல்லமையில் இருக்கிறார்கள். இருந்தாலும் ஆண் பெண்ணின் மேலும், பெண் கீலே தான் படுத்திருக்கிறாள்.
இந்த நிலை மிகவும் இயந்திரத்தனமானது (machinary position) என்கிறது
காமத்தில் ஆண்களின் உண்மையான உணர்வு என்ன என்று ஒரு பெண்ணுக்கு தெரிவது இல்லை.
அதே போல் பெண்ணின் பாலுறவு தேவை என்ன என்று ஒரு ஆணுக்கு தெரிவது இல்லை.
இது ஆண்/பெண் தவறு இல்லை. எல்லா சமூகமும் அதை பொது வழியில் சாமானியனுக்கு மறைத்தே வைத்திருக்குகிறது.
இங்கு பல்லாயிரம் வருடங்களாக அரசர்கள், தலைசிறந்த வீரர்களுக்கு காமம் தாராளமாக கிடைத்திருக்கிறது, அரசர்களுக்கு ஆயிரக்கணக்கில் மனைவிகள், இன்றளவும் பல அரசியல் தலைவர்கள் பல திருமணங்கள், பல பெண்களுடன் உறவு, நடிகர்கள், இசை அமைப்பாளர்கள் பலதார திருமணங்கள் அவர்கள் ஒன்றாகவும் வாழுகின்றனர், நம் கண்கள் முண்னும் வலம் வருகின்றனர்.
ஆனால் இதே ஒரு சாமானியன் பண்ணிவிட்டால் அவனை அந்த குடும்பத்தையே வறுத்து எடுக்கும் நிகழ்ச்சியும் தொலைக்காட்சி தொடரில் ஒளிபரப்பாகிறது.
இதை சொல்ல வருவதால் பல தாரா உறவை ஆதரிப்பதாக இல்லை. ஒரே விஷயம் அவர்கள் பண்ணும் போது சாதாரணமாகவும், இதை ஒரு சாமானியன் பண்ணும்போது அதை ஒழுக்கக்கேடு என்றும் நம்மை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.
இங்கு முக்கியமாக அனைவரும் புரிந்து கொள்ளவேண்டிய விஷயம். ஒரு ஆணுக்கோ, பெண்ணுக்கோ 14 வயதிலிருந்தே ஈர்ப்பு, இச்சைகள் வருவது இயல்பு இயற்கையில் திருமணம் ஆகாத ஆண் பெண்ணுக்கும் ஈர்ப்பு வருவது இயல்பு.
அதே போல் திருமண ஆனபிறகும் ஒரு ஆணுக்கோ, ஒரு பெண்ணிற்கோ தன் இணை அல்லாத மற்றொறு ஆணிடமோ, பெண்ணிடமோ ஈர்ப்பு வருவதும் ஒரு இயல்பான இயற்கையான விசயம். இந்த மனதின் ஆசையை யாரும் வேலிபோட்டு தடுக்க முடியாது. இதை அறிவுப்பூர்வமாக எவ்வாறு கையாளுவது என்பதுதான் முக்கியம் என்று பாலியல் மருத்துவர்கள் கூறுகிறாரகள்.
இது தவறு, சரி என்பது அவரவர் வாழும் நாடு, மக்களை பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது.
மன்மத கலை சொல்லித்தெரிவது இல்லை என்று கூறுவார்கள் ஆனால் தந்த்ரா மன்மத கலையை, கலவி அறிவு மிகவும் முக்கியம் என்கிறது
அதுவும் இளமையில் முக்கியம் என்கிறது. ஏனென்றால் இளமையில் காமத்தின் சக்தி உச்சத்தில் இருக்கும்.
அந்த அந்த வயதில் என்னென்ன சக்தி இருக்குமோ, அந்த வயதை கடந்து விட்டால் இயற்கை ஒரு இம்மி அளவுகூட அந்த சக்தியை கொடுப்பது இல்லை. இயற்கைக்கு சமுதாயத்தை பற்றி எல்லாம் கவலைப்படுவது இல்லை.
இளமை காலம் எல்லாம் பணத்தின் பின் ஓடியபிறகு, முதுமையில் வயக்ரா போன்ற மருந்துகளை தேடவேண்டிய நிலையாக உள்ளது.
இது சரி, தவறு என்று கருதாமல். இன்றைய நிலவரம் இவ்வாறாகத்தான் இருக்கிறது;
ஒரு ஆண் எவ்வாறு ஒரு பெண்ணிடம் பழகவேண்டும். ஒரு பெண் எவ்வாறு ஒரு ஆணிடம் பழகவேண்டும்.
ஒரு ஆணுடன் எவ்வாறு ஒரு பெண் இனைய வேண்டும், எவ்வாறு உடலுறவு கொள்ளவேண்டும். மனம் விரும்பும் ஒருவரை காமம் கொள்ளும்போது ஏற்படும் மாற்றம்.
மனம் விருப்பம் இல்லாதவருடன் காமம் கொள்ளும்போது உடலில் ஏற்படும் வேதியியல் மாற்றங்கள் இதை அறிவியல் பூர்வமாக ஆண்/பெண் முக்கியமாக பெண்களுக்கு இது உடல் சார்ந்த விஷயம் மட்டும் இல்லை,
மனம் சார்ந்த விஷயமாகவும் காமம் இருக்கிறது (Psychosomatic) என்று விவரித்தனர்.
அதாவது உடல்கள் மட்டும் இணைதல் Sex இல்லை. இரண்டு உள்ளங்களும் இணைந்தால்தான் முழுமையான இன்பத்தை பெறமுடியும் அல்லது சுகம் கிடைக்கும்.