ஆரோக்கியமான மற்றும் நிறைவான திருமணத்திற்கு சந்தோஷமான தாம்பத்தியம் ஒரு முக்கிய அங்கமாகும். இருப்பினும், சில நேரங்களில் அது மனைவிக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தும். இந்த அதிருப்தியின் பின்னணியில் உள்ள காரணங்களைப் புரிந்துகொள்வது கணவன் மனைவி இடையே இருக்கும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு உதவும்.
மனைவி தன் கணவனுடனான தாம்பத்தியத்தில் ஏமாற்றமடைவதற்கான 4 முக்கிய காரணங்கள் இங்கே உள்ளன.
1. புரிதல் இல்லாமை
தாம்பத்தியத்தில் மனைவிக்கு ஏற்படும் ஏமாற்றத்திற்கான முக்கிய காரணங்களில் ஒன்று அவளது கணவனுடனான உணர்ச்சி ரீதியான துண்டிப்பு ஆகும். கணவரோடு மன ரீதியான நெருக்கம் இல்லாதபோது, அவரோடு இருக்கும் நெருக்கம் இயந்திரத்தனமாகவும், சந்தோஷமற்றதாகவும் இருப்பதாக மனைவி உணர்வாள்.
கணவன் தன் மனைவியை உணர்வு பூர்வமாக நேசிக்கவில்லை என்றால், அவரோடு நெருக்கமாக இருக்கும் நேரத்திலும், மனைவி உணர்ச்சியற்ற ஜடமாக தான் இருப்பாள். இது மனைவிக்கு அதிருப்தி உணர்வுக்கு தான் வழிவகுக்கும். ஒரு ஆழமான, திருப்திகரமான தாம்பத்தியம் உருவாக்குவதற்கு, மனைவியோடு உணர்ச்சிபூர்வமான நெருக்கம் கணவருக்கு அவசியம் தேவை.
2. தேவைகளை பேச முடியாமை
மனைவிக்கு தன் தேவைகள், ஆசைகள் அல்லது விருப்பங்களை கணவரோடு பகிர்ந்து கொள்ள முடியாத போது, அது அவளுக்கு விரக்தி மற்றும் ஏமாற்றத்திற்கு வழிவகுக்கும். மனைவிக்கு அவள் தேவைகளை வெளிப்படையாக கணவரிடம் சொல்ல முடிந்தால் தான் அவளுக்கு தாம்பத்தியதில் விருப்பம் இருக்கும்.
கணவன் மனைவிக்கு அவரவர் தேவைகளை ஒளிவு மறைவு இல்லாமல் பகிர்ந்து கொள்ள முடிந்தால் தான், இருவரிடையே உள்ள நெருக்கம் அதிகரித்து, தாம்பத்யமும் இனிக்கும்.
3. குடும்ப பிரச்சனைகளால் சலித்து போகும் தாம்பத்தியம்
காலப்போக்கில்,குடும்ப பொறுப்புகள் அதிகரிக்க அதிகரிக்க , தாம்பத்தியத்தின் மேல் உள்ள ஈடுபாடு குறையலாம். கணவன் மனைவி இருவரும் குடும்ப பொறுப்பை பற்றியே யோசித்து கொண்டு இருந்தால், வாழ்க்கையே சலித்து போகும். திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளும், பொறுப்புகளும் கூடி கொண்டே தான் போகும்.
அதற்காக இருவரும் தாம்பத்தியத்தை தவிர்க்க கூடாது. தாம்பத்தியம் உடல் ரீதியான இணைப்பு மட்டும் கிடையாது. அது கணவன் மனைவி இடையே அன்பை அதிகரிக்கும். கணவர் தன்னுடைய ஆசையில் மட்டும் கவனம் செலுத்தாமல், மனைவியின் உணர்ச்சிகளை பூர்த்தி செய்து பின்னர் தாம்பத்தியத்தில் ஈடுபட்டால், அவள் அடையும் சந்தோசத்திற்கு ஈடு இணையே கிடையாது.
4. உடல் ஆரோக்கியம் பாதிப்பு மற்றும் மன அழுத்தம்
மனைவிக்கு மன அழுத்தம் இருந்தாலும், அவளுக்கு தாம்பத்தியத்தில் ஆசை குறைந்து விடும். தனக்கு ஆறுதலாக இருக்கும் கணவனை மனைவி மிகவும் நேசிப்பாள். தனக்கு உடல் சோர்வாக இருக்கும் போது தாம்பத்தியத்திற்கு வற்புறுத்தாத கணவனை மனைவி ஆராதிப்பாள்.
தன் காதலை வெளிப்படையாக காண்பிக்கும் கணவனின் அண்மையை, மனைவி மிகவும் விரும்புவாள். அவள் மேல் கொண்ட ஆசையை காதலோடு காண்பிக்கும் கணவனோடு இணையும் போது மனைவி ஆனந்தத்தின் உச்சிக்கே சென்று விடுவாள்.
கணவருக்கு தாம்பத்தியம் உடல் ரீதியான தேடல், மனைவிக்கோ தாம்பத்தியம், உணர்வுகளின் சங்கமம். இதை தன் கணவர் புரிந்து கொண்டு அவள் ஆசைகளை பூர்த்தி செய்யமாட்டாரா என்பது தான் ஒவ்வொரு பெண்ணின் ஏக்கமும். இந்த ஏக்கம் இது நாள் வரை பல பெண்களுக்கு நிறைவேறாத ஏக்கமாக தான் இருக்கின்றது.