என் அளவுகளை அள்ளிப்பார்த்து
அளவெடுத்து தைத்து விட்டுத்தான்
போயிருந்தான்..
தோலாடை நோவில்
ஒரு துளைக்காதல்…
கண்ணால் பார்த்தது போக
இன்னும் மீந்திருந்த இடத்தில்
ஆடை கொண்டு மேய்ந்திருந்தான்
முயல்குட்டிகளின் தூக்கம்
கலைந்து எழுந்து நின்றது.
காதுகள்.
நேரில் பார்க்கும்போது
எழுந்து நின்று
மரியாதை தரும்
ஆண்மைகள் தான்..
அண்மையில்
ஆ திறந்த வாசலின் வழியே வந்து போனவர்கள்..
கருந்தேளினொரு பாகத்தில்
கை நகம் பட்டதும்
கிளர்ந்தெழும் கொடுக்கு போல்..
அவ்விடத்தில் ஒரு உப்பம்..
இன்னும் ஒரு நாள் உன்னோடு வாழ்ந்து விட வேண்டும் என்ற ஆசை வருகிறது வாசலில் நின்றபடி நீ கையசைத்து போகும் போது..
அளவீடுகளில் என் வதனம்
கண் கொண்டு வர்ணிக்கிறாய்..
காம்புகள் பூக்கிறது.
காலடி வரை.. என்
கை நிறைத்த காமம்..
நன்றி இயலிசம்…