Breaking News :

Tuesday, April 15
.

காம எண்ணத்தில் இருந்து விடுபடுவது எப்படி?


உங்க கண்ணுல தென்படுற எல்லா ஆம்பளைங்களுக்கும் பெரும்பாலும் காமத்தை பற்றிய எண்ணம் அதிகமா தான் இருக்கு.. உங்களுக்கு கொஞ்சம் நல்ல மனசு அதனால ஒருவித குற்ற உணர்ச்சி வருது.. அவ்வளவு தான்.

திருமணம் ஆகலைன்னா உடனே நல்ல பொண்ணா பார்த்து திருமணம் செய்துக்கோங்க. காமத்துக்காக மட்டுமில்ல, மனசு விட்டு பேச நம்பிக்கையான ஒரு துணை கிடைக்கும்.. கரப்பழக்கம் இருந்து அதை தினமும் செய்யுற ஆளா இருந்தா, கொஞ்சம் கஷ்டப்பட்டு அதை நாலு நாளைக்கு ஒருமுறை'ன்னு மாத்திக்கோங்க.. எல்லாமே மனப்பழக்கம் தான்..

நம்ம கண்ணு ஒரு அழகான பொண்ண பார்த்த உடனே பார்வையை மாத்திடும்.. ஆனா நம்ம மனசு பெரும்பாலும் அந்த பெண்ணை நிர்வாணமாக்கி பார்க்காம விடாது.. பல பேரோட குற்ற உணர்ச்சிக்கு காரணம் அது தான்.  குழந்தையா இருக்கும் போது பெத்த தாய் மார்புல பாலை குடிச்சிட்டு அந்த அன்பான அணைப்புல உறங்குன எல்லா ஆண்களுக்கும் சைக்காலஜிக்கலா அது மேல ஒரு ஈர்ப்பு இருக்கும்.. அதனால தான் நம்ம நல்ல மனசு அதை தவறான கண்ணோட்டத்துல பார்க்க கூடாதுன்னு ஒருவித குற்ற உணர்ச்சியை நமக்குள்ள ஏற்படுத்தும்..

தினமும் குளிர்ந்த நீர்'ல குளிங்க.. நிறைய வொர்க் அவுட் பண்ணுங்க.. தானா சிந்தனை மாறும்.. ஏதாவது ஒரு நல்ல விஷயத்தை குறிக்கோளா வைச்சு அதை அடைய போராடுங்க. உங்களை அதுக்காக தயார் படுத்திக்கோங்க. இந்த முயற்சியில சுய இன்பம், காம உணர்வு எல்லாமே கொஞ்சம் கொஞ்சமா கண்ட்ரோல் ஆகும்..  முக்கியமா இன்ஸ்டாகிராம், Youtube பக்கம் இந்த மாதிரி விஷயங்களுக்காக போகாம இருந்தாலே நம்ம மனசு லேசா இருக்கும்..

ஒரு புதிய ஆய்வுக் கட்டுரை கூறுவது யாதெனில் வயது வந்த ஆண்கள் ஒரு நாளைக்கு 19 முறையும் பெண்கள் ஒரு நாளைக்கு 10 முறையும் உடலுறவை பற்றி சிந்திப்பதாக தெரிகிறது.
அதாவது உழைப்பும் பொறுப்பும் கூடக் கூட இந்த நினைப்பு தானாக மட்டுப்பட்டு விடும்.
இதுக்கெல்லாம் நீங்க பீல் பண்ணி உடம்பை கெடுத்துக்காதீங்க. உங்களுக்கு அட்வைஸ் பண்ற அளவுக்கு எவனும் இங்க யோக்கியன் இல்ல (அடியேனையும் கணக்கில் சேர்த்து).

நீங்க விரும்புனாலும் விரும்பாட்டியும் உங்களுக்கான flight ticket (மரண தேதி) ஏற்கனவே புக் பண்ணியிருப்பாங்க.. வர வேண்டிய நேரத்துல அவங்க வந்து தர வேண்டிய நேரத்துல உங்க Boarding pass-ஐ கண்டிப்பா உங்க கையில கொடுத்துடுவாங்க.. அதனால அதை பத்தியெல்லாம் யோசிச்சு டைம் வேஸ்ட் பண்ணாதீங்க..

ஏதாவது சாதிக்க முயற்சி பண்ணுங்க.. நான் கூட ரைட்டர் ஆகணும்னு Quora'வுலயும் பிரதிலிபியிலயும் ஏதேதோ கிறுக்கி தள்ளிக்கிட்டு இருக்கேன்.. ஒரு முயற்சி தான.. நீங்களும் அந்த மாதிரி உங்களுக்கு பிடிச்ச விஷயங்களை டிரை பண்ணுங்க.. கண்டிப்பா நல்லா வருவீங்க..  அஞ்சு கோடி உயிரணுக்கள்'ல நீங்க மட்டும் தான் சக்ஸஸ்புல்லா முதல் ஆளா தாயோட கருவுக்குள்ள நுழைஞ்சு மனித பிறவியெடுத்திருக்கீங்க.. அஞ்சு கோடி பேரை உலக விவரம் தெரியாத அப்பவே ஜெயிச்ச உங்களால, இவ்வளவு நல்லது கெட்டது தெரிஞ்ச பிறகு, நினைச்ச நல்ல விஷயங்களை சாதிக்க முடியாதா என்ன. அதீத காம உணர்வு தவறுன்னு நினைக்கறீங்க பாருங்க.. அந்த மனசு தாங்க கடவுள்..

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.