கோடைக்காலம் தொடங்கிய நிலையில், உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய உணவு வகைகளில் கேழ்வரகும் ஒன்றாகும். அந்த கேழ்வரகைக் கொண்டு பல்வேறு வகையான உணவுகளை தயார் செய்யலாம். அவற்றில் இந்த வெயிலுக்கு ஏற்ற உணவாக கேழ்வரகு கூழ் ஆகும்.
இதில், உடலுக்கு நன்மை தரும் அமினோ அமிலங்களும், கால்சியம், இரும்புச்சத்து, நியாசின், தையமின், ரிபோஃப்ளோவின் ஆகியவையும் உள்ளன. உடலின் நைட்ரஜன் அளவைச் சமப்படுத்தவும், சேதமடைந்த திசுக்களைச் சரிசெய்வதற்கும் கேழ்வரகு முக்கிய உணவாக விளங்குகிறது.
இதனை நம் கடைகளில் வாங்கி சாப்பிட்டு கொண்டிருக்கிறோம். இதனை எப்படி நமது வீடுகளில் எளிதாக செய்யலாம் என இதோ பார்ப்போம்...
தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு - 4 கப், அரிசி நொய் - 2 கப், தயிர் - 3 கப், உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
முதல் நாள் இரவே மூன்று பங்கு தண்ணீர் ஊற்றிக் கேழ்வரகு மாவை நன்கு கரைத்து வைத்துக் கொள்ளவும். பின், காலையில் எழுந்தது, ஊரவைத்த கேழ்வரகு மாவை, ஒரு பெரிய பாத்திரத்தில் ஆறு கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். நன்றாகக் கொதித்ததும் நொய்யைக் கழுவிப் போடவும். நொய் வெந்ததும் கரைத்து வைத்துள்ள மாவைச் சேர்த்துக் கட்டியில்லாமல் கிளறவும். மாவு வெந்ததும் இறக்கவும்.
இறக்கிவைத்த கூழுடன் உப்பு, தண்ணீர் சேர்த்துக் கரைக்கவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி அதில் போட்டு கலக்கிவிடலாம் அல்லது நறுக்கிய வெங்கியத்தை தனியாக வைத்தும் குடிக்கலாம். இதில், தண்ணீருக்குப் பதில் மோர் ஊற்றியும் குடிக்கலாம்.
இதன் சுவையே தனியாக இருக்கும்