Breaking News :

Thursday, December 26
.

ஆண்மை சக்தி அதிகரிக்க கீழாநெல்லியை?


கல்லீரலின் இயக்கம் சீராக நடைபெற்றால் இதன் விளைவாக உடலில் அழகும் ஆரோக்கியமும் நீண்ட இளமையும் எப்போதும் இயல்பாக இருக்கும்.

கல்லீரலின் இயக்கத்தில் மாற்றம் ஏற்பட்டால் அதாவது கல்லீரல் பாதிப்பு அடைந்து விட்டால் நமது உடலில் ஆரோக்கியம் பாதிக்கப்படும் இளமையிலேயே முதுமை தோற்றம் வந்துவிடும்
  எனவே கல்லீரலை பலம்பெற செய்தால் போதும் உடலில் தோன்றும் அனைத்து விதமான நோய்களின் பாதிப்புகளும் வெகு எளிதாக விலகிவிடும்.

கல்லீரல் பாதிப்பு ஏற்படாமல் இருக்க  உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்க ஒரு எளிய வைத்தியம்.

பச்சையான கீழாநெல்லி இலையை ஒரு கைப்பிடி அளவு பறித்து இதை மைபோல அரைத்து ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு எடுத்துக்கொண்டு பசு மோர் அல்லது பசும்பாலில்  இதை கலக்கி காலை வேளையில் வெறும் வயிற்றில் இதை பருகி வர இதன் விளைவாக கல்லீரல் மிகுந்த பலத்தை பெறும்.

மற்ற உறுப்புகள் ஆரோக்கியமாக இயங்க இது மிகவும் துணை புரியும் உடலில் எப்போதும் இளமை நீடிக்கும் இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.  நமது உடலில் மிக மிக முக்கிய உறுப்புகளான கல்லீரல் இரைப்பை சிறுநீரகம் பித்தப்பை கணையம் மண்ணீரல் கருப்பை போன்ற ராஜ உறுப்புகள் அனைத்தும் பழுது ஏற்படாமல் நல்லமுறையில் பாதுகாக்கப்படும்,

சிறுநீரகம் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் இயங்க கீழாநெல்லி பெரிதும் உதவும் எந்த முறையிலேனும் கீழாநெல்லியை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் உட்கொண்டு வந்தால் சிறுநீரகம் பலம் பெறும். இதன் மூலம் மண்ணீரல் பழுதடையாமல் பாதுகாக்கப்படும் நமது உடலில் மண்ணீரல் பழுதடையாமல் இருந்தால் சர்க்கரை நோய் பாதிப்புகள் உடலில் தோன்றாது.

சர்க்கரை நோயின் பாதிப்பால் இன்சுலின் சுரப்பு குறைந்திருந்தாலும் கீழா நெல்லியை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் உடலில் இன்சுலின் உற்பத்தி அதிகரிக்கும் கணையமும் நன்கு செயல்பட துவங்கும்.

சர்க்கரை நோயின் பாதிப்பில் இருப்பவர்கள் கீழாநெல்லியுடன் சம அளவாக வெள்ளை கரிசலாங்கண்ணியை சேர்த்து இரண்டையும் பொடியாக செய்து கொண்டு இதை தினந்தோறும் காலை மாலை இருவேளையும் இதில் மூன்று கிராம் எடுத்து இதை வெந்நீரில் கலந்து  இதை தொடர்ந்துசாப்பிட்டு வர சர்க்கரை நோயின் பாதிப்புகள் அனைத்தும் முழுமையாக விலகும் மேலும் உடலில் மற்ற நோய்கள் ஏதும் ஏற்படாத வண்ணம் இது நமது உடலை பாதுகாக்கும்.

ரத்த சோகை இருப்பவர்கள் இந்த மருத்துவ முறையை கடைபிடித்து வந்தால் ரத்த சோகை நீங்கும் இரத்தத்தின் உற்பத்தி அதிகரிக்கும்.

கீழாநெல்லி இலையை ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்து மை போல அரைத்து பசும்பாலுடன் கலந்து சாப்பிட்டு வர உடலுக்கு நல்ல குளிர்ச்சி உண்டாகும் உடல் உஷ்ணத்தால் இளைத்த உடலில் கொஞ்சம் சதை பிடிக்கும் முகத்தில் அழகும் பொலிவும் ஏற்படும்.

இளமை நீடிக்க, வாலிப வயோதிகம் நீங்க, ஆண்மை சக்தி அதிகரிக்க கீழாநெல்லியுடன் சம அளவாக  ஓரிதழ் தாமரை விஷ்ணுகிரந்தி இரண்டையும் கலந்து இதை மைபோல அரைத்து ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்து அதிகாலையில் தொடர்ந்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வர இளமையில் தோன்றும் முதுமை மறையும் ஆண்மை சக்தி அதிகரிக்கும் நீர்த்த விந்து இறுகி கெட்டிப்படும் காமாலை நீங்க  கல்லீரல் பலம் பெற கீழாநெல்லி இலை கரிசிலாங்கண்ணி இலை தும்பையிலை இவைகளை சம அளவாக எடுத்து நன்றாக இதை அரைத்து ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்து கொண்டு  காயவைத்து ஆறிய பசும்பாலில் இதை கலந்து காலைவேளையில் தொடர்ந்து பதினைந்து  நாட்கள் பருகி வர மஞ்சள் காமாலை பூரணமாக குணமாகும்.

இந்த மருந்தை சாப்பிடும் காலங்களில் உணவில் உப்பு புளி காரத்தை முழுமையாக நீக்க வேண்டும் பால்சோறு அல்லது மோர் சாதம் சாப்பிட்டால் இந்த மருத்துவ முறையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் இது உறுதி
வெள்ளை நோய் நீங்க
நீர்த்தாரை ரணம் குணமாக
கீழாநெல்லி ஓரிதழ்தாமரை யானை நெருஞ்சில் இவைகளை சமஅளவாக எடுத்து இதை மைபோல அரைத்து ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்துக் கொண்டு இதை எருமைத் தயிரில் கலந்து பத்து நாட்கள் காலை வேளையில் சாப்பிட்டு வர நீர்த்தாரை ரணம் குணமாகும் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை ஒழுக்கு நீங்கும்.
 
இந்த மருத்துவ முறையை கடைபிடிக்கும் பொழுது அதிக காரமும் மிகுந்த சூடும் இல்லாமல் உணவை சாப்பிட வேண்டும்.

தோல் நோய்கள் நீங்க
சர்க்கரை நோய் குணமாக
கீழாநெல்லி வெள்ளை மிளகு பரங்கிப்பட்டை சிறியாநங்கை   ஆடுதின்னா பாளை இவைகளை சம அளவாக எடுத்து நிழலில் உலர்த்தி பொடியாக செய்து கொண்டு இதில் மூன்று கிராம் எடுத்து வெந்நீருடன் கலந்து  காலை மாலை இருவேளையும் தொடர்ந்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வர கருங்குட்டம் வெண்குட்டம் சிறுநீர் வழியில் ஏற்படும் புண்கள் தோல் வியாதிகள் இவைகள் குணமாகும் மேலும் சர்க்கரை நோயின் பாதிப்புகள் அனைத்தும் முழுமையாக நீங்கும்.

 ஒரு கைப்பிடி அளவு கீழாநெல்லி இலையை பறித்து இதில் சிறிதளவு உப்பு சேர்த்து இதை நன்றாக மை போல அரைத்து சொறி சிரங்கு அரிப்பு உள்ள இடங்களில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்து வர தோலில் ஏற்படும் படை கடி போன்ற விஷங்கள் நீங்கிவிடும் தேகத்தில் ஏற்படும் எரிச்சல் குணமாகும்.

பார்வை சக்தி அதிகரிக்க  கீழாநெல்லி மூக்கிரட்டை பொன்னாங்கண்ணி இவைகளை சம அளவாக பொடி செய்து இதில் மூன்று கிராம் எடுத்து இருநூறு மில்லி
பசுமோரில் கலந்து இதைத் தொடர்ந்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வர மாலைக்கண் பார்வை மங்கல் வெள்ளெழுத்து போன்ற பார்வை குறைபாடுகள் நீங்கும் கண்ணில் பார்வை சக்தி அதிகரிக்கும்.

சீதபேதி குணமாக  கீழாநெல்லி இலை மாதுளம் கொழுந்து நாவல் கொழுந்து இவைகளை சம அளவாக எடுத்து மைபோல் அரைத்து ஒரு நெல்லிக்காய் அளவு வெறும் வயிற்றில் இருநூறுமில்லி பசு மோரில் கலந்து குடித்து வர சீதபேதி குணமாகும்.

பீனிசம் மூக்கடைப்பு குணமாக  கீழாநெல்லி இலைச்சாறு உத்தாமணி இலைச்சாறு குப்பைமேனி இலைச் சாறு இவைகளை சம அளவாக எடுத்துக் கொண்டு இதற்கு சமமாக நல்லெண்ணெய் சேர்த்து இதை தைல பதமாகக் காய்ச்சி வடித்து கொண்டு இதில் இரண்டு துளி வீதம் எடுத்து இரண்டு மூக்கிலும் நசியமிட்டு வர ஓயாத தலைபாரம் தலைவலி நீங்கும் மூக்கில் நீர்வடிதல் குணமாகும் பீனிச நோய் குணமாகி மூக்கடைப்பு நீங்கும்.

விக்கல் ஏப்பம் வயிற்று உப்பிசம் குணமாக  கீழாநெல்லியை நிழலில் உலர்த்தி காய வைத்து பொடியாக செய்து இதற்கு சமமாக மிளகு வெள்ளைப் பூண்டு சேர்த்து கல்வத்திலிட்டு மைபோல அரைத்து சிறு சிறு மாத்திரைகளாக செய்து வைத்துக்கொண்டு இதில் இரண்டு மாத்திரை வீதம் சாப்பிட்டுவர குளிர் காய்ச்சல் முறை காய்ச்சல் நாள்பட்ட காய்ச்சல் சீதபேதி வயிற்று மந்தம் முதலியவை குணமாகும் மேலும் விக்கல் ஏப்பம் ஏற்படும் சமயம் இந்த மாத்திரைகளில் ஒன்றை மென்று சாப்பிட்டுவரவாய்வு தொந்தரவால் ஏற்படும் நோய்கள் அனைத்தும் முழுமையாக நீங்கிவிடும்.

கீழாநெல்லி பொடியும்
மருத்துவ குணமும்
கீழாநெல்லியை முழு செடியாக பிடுங்கப்படும் அரசி நிழலில் உலர்த்தி காய வைத்து பொடியாக செய்து இதில் மூன்று கிராம் எடுத்து பசும்பாலில் கலந்து அதிகாலை வேளையில் தொடர்ந்து பருகி வர இரைப்பையில் ஏற்படும் புண்களை ஆற்றும் சிறுநீரகம் நல்ல முறையில் சீராக இயங்கும்.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினந்தோறும் கீழாநெல்லியை பச்சையாகவோ  அல்லது பொடியாகவோ செய்து கொண்டு இதை பசு மோருடன் கலந்து தொடர்ந்து காலைவேளையில் தினந்தோறும் சாப்பிட்டு வர நிச்சயமாக இது நீரிழிவு என்னும் சர்க்கரை நோயை குணப்படுத்தும்.

மேகம் சம்பந்தமான வெள்ளை வெட்டை போன்ற நோய்களையும் இது குணப்படுத்தும் காமாலை நோய் வருவதை தடுக்கும் சர்க்கரை நோய் வருவதைத் தடுத்து நிறுத்தும்
கல்லீரல் பாதிப்பை குணப்படுத்தும் இதன் மூலம்  இளமையும் அழகும் பொலிவும் எப்பொழுதும் இருக்கும்.

இயற்கை நமக்கு அளித்த அற்புதமான மருத்துவ தாவரங்களில் சிறப்பான முதல் தரமான இடத்தை கீழாநெல்லிக்கு தரலாம் அப்படி ஒரு அற்புத சக்தி கீழாநெல்லி மூலிகைக்கு உண்டு

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.